பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் 57 ஆசிரியர்களுக்கு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று.. முதல்வர் முடிவுக்கு கடும் விமர்சனம்.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2020

பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் 57 ஆசிரியர்களுக்கு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று.. முதல்வர் முடிவுக்கு கடும் விமர்சனம்..

 


கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் , 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மட்டும் திங்கள் முதல் பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனிடையே தொடங்கிய முதல் நாள் அன்றே, பள்ளிகளில் சுகாதாரத்துறை நடத்திய மருத்துவ பரிசோதனையில், 57 ஆசிரியர்கள் மற்றும் ஆறு மாணவர்களுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் பள்ளிகளை திறந்த அரசின் முடிவுக்கு ஆந்திர மாநிலத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கத்தால், உலகமே முடங்கிப்போயிருந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக படிப்படியாக தளர்வுகளுடன் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனாலும், மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் பள்ளிகளில் குழந்தைகள் மத்தியில் சமூக இடைவெளி என்பது சாத்தியம் இல்லாதது என பெற்றோர்கள் கருதுகின்றனர்.


மேலும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் பள்ளிக்கு செல்லும் ஆர்வம் இல்லாத நிலையில் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. பள்ளிகளில் மாணவர்கள் சமூக இடைவெளி இன்றி கல்வி கற்பது இரண்டாம் கட்ட கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே தற்போது பள்ளிகளை திறப்பதை காட்டிலும் தொடர்ந்து ஆன்லைன் மூலம் மாணவர்களுக்குப் பாடம் எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் விரும்புகின்றனர்.




7 comments:

  1. பள்ளிக்கு வந்ததால் தான் தொற்று வந்ததா?

    ReplyDelete
    Replies
    1. Appdai Sollungal Sir.. School is not a matter to spreading place

      Delete
    2. Intha media karange nalla vela pakurange

      Delete
  2. https://youtu.be/mdynsuT-2YA

    2013TET தேர்ச்சி பெற்றவர் பெறப்போகும் அதிர்ஷ்ட வாய்ப்பு என்ன

    ReplyDelete
    Replies
    1. நீங்க எதிர்பார்க்குற மாதிரி நியமன தேர்வு தான்,be happy 2013 batch

      Delete
  3. Nagaichuvaiyana posting nagaichuvaiyana kandanam study the nature of the disease

    ReplyDelete
  4. பள்ளிகளை திறப்பதால் தொற்று வரவில்லை. அந்த 57 ஆசிரியர் 57 வகுப்பில் பரவும். வகுப்பில் 10 மாணவர்கள் என்றால் 570 பேர். அவர்கள் மூலம் பெற்றோர்களுக்கு பரவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி