7.5% இட ஒதுக்கீட்டைப் பெற அரசுப் பள்ளியின் சான்று கட்டாயம்: மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு. ( சான்றுக்கான படிவம் இணைப்பு ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2020

7.5% இட ஒதுக்கீட்டைப் பெற அரசுப் பள்ளியின் சான்று கட்டாயம்: மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு. ( சான்றுக்கான படிவம் இணைப்பு )



மாணவர்கள் 7.5% உள் இட ஒதுக்கீட்டைப் பெற அரசுப் பள்ளியின் சான்று கட்டாயம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வால் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று, மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

இதையடுத்து, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

இவற்றில் அகில இந்திய ஒதுக்கீடு போக மீதமுள்ள இடங்களுக்கான கலந்தாய்வுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.12-ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நவ.16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 7.5% உள் இட ஒதுக்கீட்டைப் பெற, 6 முதல் 12-ம் வகுப்பு வரை தாங்கள் படித்த அரசுப் பள்ளியின் சான்றிதழைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இலவசமாக IPL match பார்பதற்கு oreo tv பதிவிறக்கம் செய்யலாம்.

மாணவர்கள் 6 - 8, 9 - 10, 11 - 12 என நடுநிலை, உயர் நிலை, மேல்நிலை என வெவ்வேறு பள்ளிகளில் படித்திருக்கும் பட்சத்தில் 3 பள்ளிகளின் படித்ததற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் அதேபோல இறுதியாக 12-ம் வகுப்புப் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கையெழுத்து மற்றும் சீல் அவசியம்.

அதேபோல மேற்குறிப்பிட்ட தகவல்கள் உண்மை என உறுதி செய்ததாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவரும் கையொப்பமிட வேண்டும் என்ற் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: 

http://tnmedicalselection.net/news/02112020234138.pdf

3 comments:

  1. நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டனர்
    தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
    முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
    தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது
    இரண்டாம் கட்டமாக தாள்1 க்கு 22500 பணியிடமும் தாள் 2 க்கு 41240 பணியிடமும் TET
    மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கப்படுகின்றது
    TETதேர்ச்சி பெற்றவர்களில் இதுவரை PGTRB எழுதி முதுகலை ஆசிரியர்களாக பணியில் உள்ளவர்கள் சுமார் 4500 ,TNPSC யில் தேர்வாகி அரசு பணியில் உள்ளவர்கள் சுமார் 17320,மத்தியரசு மற்றும் மாநில அரசு பணிகளில் பல்வேறு துறைகளில் பணியில் உள்ளவர்கள் 11500
    ஆகமொத்தம் TET தேர்ச்சி பெற்றவர்களில் சுமார்33320 க்கு மேற்பட்டோர் அரசு பணியில் மாதம்30000முதல்80000 க்கு மேல் ஊதியம் பெற்று பணியில் உள்ளனர் .தற்போது TET தேர்ச்சி பெற்றவர்களில் 40000 க்கு குறைவானவர்களே
    வேலை இன்றி உள்ளனர்
    TETதேர்ச்சி பெற்றவர்களை தொகுப்பூதியத்தில் மாதம் 10000 ஊதியத்தில் பணிநியமனம் செய்யும்போது அதிக சம்பளத்தில் உள்ளவர்கள் குறைவான சம்பளத்திற்கு பணிக்கு வர மாட்டார்கள் 2013,2017,2019அனைத்து தேவர்களுக்கும் உறுதியாக பணி கிடைக்கும் அச்சம் கொள்ளத் தேவையில்லை

    ReplyDelete
  2. தற்போது உள்ள சுழலில் பொருட்களின் விலையேற்றம் கடிமையாக உயர்ந்துள்ளது.10000என்பது போதுமானதா? அரசு சற்று சிந்திக்கவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி