மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2020

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு!

 


மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என நீதிபதி பொன்.கலையரசன் தலைமையிலான குழு அரசுக்கு பரிந்துரைத்தது. இதையடுத்து தமிழக அரசு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து மசோதா கொண்டு வந்தது. திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வௌியாகின. இதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்காத நிலை ஏற்பட்டது.


இதனால், நடப்பு கல்வியாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கவும், அதுவரை நீட் முடிவை வெளியிடக் கூடாது எனவும் ஐகோர்ட் மதுரை கிளையில் இரு வழக்குகள் தாக்கலாகின.இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய முடிவெடுக்கவும், ஏழை மாணவர்களின் நலன் கருதி ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர். இதனால், தமிழக அரசு உள்இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது. தொடர்ந்து ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இதனால், இந்த ஆண்டே மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்இடஒதுக்கீடு கிடைக்கும் நிலை ஏற்பட்டது.


இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் வழக்குகளை விசாரிக்கத் துவங்கினர். அப்போது வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கும் முடிவு நல்ல பலனைத் தரும். இந்தப் பலன் அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் கிடைக்க வேண்டும். அரசுப் பள்ளி இல்லாத பல இடங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகள்தான் உள்ளன. இங்கும் ஏராளமான ஏழை மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கும் உள்இடஒதுக்கீடு வழங்கும் வகையில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அவர்களையும் சேர்க்கக் கோரி மனு செய்துள்ளோம். அதை உடனடியாக விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என்றார்.


அப்போது நீதிபதிகள், முறைப்படி மனுவாக தாக்கல் செய்யப்பட்டிருந்தால், வழக்கிற்கான பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும் என்றனர்.இதையடுத்து, இந்த மனு வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

5 comments:

  1. அப்படி கொடுக்க கூடாது...

    ReplyDelete
  2. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் படிக்கின்றனர்.அவர்களும் பயனபெறவேண்டும்.

    ReplyDelete
  3. அரசு உதவிபெறும் பள்ளிகள் பணியிடங்கள் அரசு நியமனம் செய்வதில்லை. அவர்களே பணத்தை பெற்றுக் கொண்டு நிரப்பப்படுகிறது. மேலும் அப்பள்ளியில் சுயநிதி பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடப்பதால் பல்லாயிரக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு இப்பள்ளிகளில் மோசடிகள் நடைபெறும். எனவே அரசு உதவிபெறும் பள்ளிகள் சுயநிதி பாடப்பிரிவு தொடங்க கூடாது.உதவிபெறும் பள்ளியில் பணியிடங்கள் அரசேநியமனம் செய்தால் இட ஒதுக்கீடு கோரலாம்.

    ReplyDelete
  4. அரசு உதவிபெறும் பள்ளிகள் பணியிடங்கள் அரசு நியமனம் செய்வதில்லை. அவர்களே பணத்தை பெற்றுக் கொண்டு நிரப்பப்படுகிறது. மேலும் அப்பள்ளியில் சுயநிதி பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடப்பதால் பல்லாயிரக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு இப்பள்ளிகளில் மோசடிகள் நடைபெறும். எனவே அரசு உதவிபெறும் பள்ளிகள் சுயநிதி பாடப்பிரிவு தொடங்க கூடாது.உதவிபெறும் பள்ளியில் பணியிடங்கள் அரசேநியமனம் செய்தால் இட ஒதுக்கீடு கோரலாம்.

    ReplyDelete
  5. உதவிபெறும் பள்ளியில் சுயநிதி பாடப்பிரிவு தொடங்க கூடாது. அவ்வாறு உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே அரசு நிதியுதவி வழங்கவேண்டும். சுயநிதி பாடப்பிரிவு உள்ள பள்ளிகளை தனியார் பள்ளிகளாக கருதவேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி