மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2020

மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் !

 


எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். தரவரிசை பட்டியல், வரும், 16ம் தேதி வெளியிடப்படுகிறது.


அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 2020 - 21ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைனில் விண்ணப்பிப்பது, 3ம் தேதி துவங்கியது. 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற, இணையதளங்களில் விண்ணப்பித்து வருகின்றனர்.


இதுவரை, அரசு இடங்களுக்கு பதிவு செய்த, 24 ஆயிரத்து, 900 மாணவர்களில், 23 ஆயிரத்து, 218 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். இதில், 19 ஆயிரத்து, 7 பேர் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர். அதேபோல், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு பதிவு செய்த, 14 ஆயிரத்து, 234 பேரில், 12 ஆயிரத்து, 577 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். இதில், 9,903 பேர் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர். 


இந்நிலையில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம், இன்று மாலை, 5:00 மணியுடன் நிறைவடைகிறது.விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்கள், ஏதாவது திருத்தம் மேற்கொள்ள வேண்டி இருந்தால், சேர்க்க வேண்டிய பதிவு மற்றும் சான்றிதழை, selmedi@yahoo.co.in என்ற, மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 


கல்லுாரிகள், கட்டணம், விண்ணப்பிப்பது போன்ற விபரங்களுக்கு, இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள தகவல் தொகுப்பேட்டை பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும், 

044 - 28364822, 98842 24648, 98842 24649, 98842 24745, 98842 24746 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு, தகவலை பெறலாம். இதற்கான தரவரிசை பட்டியல், வரும், 16ம் தேதி வெளியிட, மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி