பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2020

பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை

பள்ளி,  கல்லூரிகள் நவம்பர் 16ல் திறக்க எதிர்ப்பு எழுந்துள்ள நிலைையில் திறப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிின்றார்.

தமிழகத்தில் நவ.16-ல் பள்ளிகளை திறக்கலாமா? தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடந்து கொண்டு இருந்தபோதே நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிளஸ் 2 தேர்வின் இறுதி நாளான அன்று தொற்றின் வேகம் அதிகரித்தது. தேர்வு முடிந்த மறுநாளான  மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் மாதம் நடக்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கீழ் வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.  பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பின்னர் படிப்படியாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும், 9,10,பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பாடம் நடத்தும் வகையில் பள்ளிகளும் நவம்பர் 16ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு  அறிவித்துள்ளது. இருப்பினும், கொரோனா தொற்று முற்றிலும் முடிவுக்கு வராத நிலையில் தங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப முடியாது என்ற பெற்றோர் ஒட்டுமொத்தமாக மறுத்து வருகின்றனர். தமிழக அரசின் பள்ளி  திறப்பு அறிவிப்பிற்கு எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தப்பின் பள்ளிகளை திறக்கலாமா?  இல்லை தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து அரசு அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

16 comments:

  1. This festival season is not suitable to reopen schools. எல்லா இடத்திலும் பயங்கர மக்கள் கூட்டம் தொற்று பரவ வாய்ப்பு அதிகம்.

    ReplyDelete
  2. Sir It's not a right time for open a school or college

    ReplyDelete
  3. Replies
    1. Seriyana kelvi... Ipdiye poite iruntha board exam students epdi padika mudiyum?School thornatha tha pasanga padipanga... So we need to reopen schools with all safety measures

      Delete
  4. கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை .அதன் தாக்கம் குறையாது... அப்படி இருக்கும் சூழ்நிலையில் எப்போது பள்ளிகளை திறப்பது... தகுந்த முன்னேற்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க வேண்டும்..அதற்கு மாணவர்களும் பெற்றோர்களும் மற்றும் பொதுமக்களும் சிறப்புடன் செயல்பட்டால் அந்த தொற்றிலிருந்து நாம் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்..

    ReplyDelete
    Replies
    1. Ethu okk correct Haa solringa

      Delete
    2. Dei nee solriyae mudikittu nee school ku poeda sirappa nadakanoema ivanukku

      Delete
  5. After pongal next year Government may consider the reopening of colleges and schools after analysing the situation.

    ReplyDelete
  6. பள்ளி திறக்கலாம். மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறி வருகிறரர்கள்.மக்கள் தற்போது இயல்பாகவே
    வாழ்ந்து வருகின்றனர்.

    ReplyDelete
  7. Open for school I am in private school teacher டாஸ்மாக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் திரையரங்குகள் இயங்கினால் கோ
    கொரோனா வராது... ஆனால் பள்ளிகள் திறந்தால் கொரோனா வரும் என்னடா இது...full lockdown pannunga please 2025 la yella open pannalam

    ReplyDelete
  8. நாள்தோறும் பணி நிமித்தமாக வெளியே சென்று வரும் பெற்றோர்களால் அவர்கள் குழந்தைகளுக்கு நோய் வருவதற்கு வாய்ப்புகள் இல்லையா ?

    பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளி ஏதுமின்றி ஆங்காங்கே இருக்கும் ஒரு சில விளையாட்டு மைதானங்களில் அவ்வப்போது விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் இதன் மூலம் அவர்களுக்கு நோய் வருவதற்கு வாய்ப்புகள் இல்லையா ?

    ஆங்காங்கே இருக்கின்ற ஒரு சில நீர் நிலைகளில் சொற்ப எண்ணிக்கையில் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடனோ அல்லது தங்கள் நண்பர்களுடனோ பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமைகளில் முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளி ஏதுமின்றி பொழுது போக்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் இதன் மூலம் அவர்களுக்கு நோய் வருவதற்கு வாய்ப்புகள் இல்லையா ?

    ஒரு சில தனியார் பயிற்சி மையங்களில் சமூக இடைவெளி ஏதுமின்றி பள்ளி மாணவர்கள் எதிர்வரும் தேர்வுக்காக பயிற்சி எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் இதன் மூலம் அவர்களுக்கு நோய் வருவதற்கு வாய்ப்புகள் இல்லையா ?

    இதுபோல் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

    கொரோனாவிற்கு எதிராக செயல்படும் தடுப்பு மருந்து இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராத இன்றைய சூழலில் நாம் விழிப்போடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

    இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த கொரோனாவின் பெயரைச் சொல்லிக் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறக்காமல் இருக்கப்போகின்றார்கள் என்று தெரியவில்லை.

    மாணவர்களுக்கு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி போதிய பாதுகாப்பு அம்சங்களுடன் சரியான தருணத்தில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.அதுவே காலத்தின் கட்டாயம்.













    ReplyDelete
  9. Korana adigama iruku,election one year postponed pannalama m.k.s

    ReplyDelete
  10. Good idea eps ops ok but mks ku okva

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி