ஆசிரியர் பணி நியமனமே இல்லை: ஜாக்டோ - ஜியோ குற்றச்சாட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2020

ஆசிரியர் பணி நியமனமே இல்லை: ஜாக்டோ - ஜியோ குற்றச்சாட்டு

 


தமிழகத்தில் இந்த ஆட்சியில் ஒரு ஆசிரியர் பணியிடம் கூட நியமிக்கப்படவில்லை,' ' என சிவகங்கையில் ஜாக்டோ- ஜியோ நிதிக்காப்பாளர் எஸ்.மோசஸ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: 


தமிழகத்தில் இதுவரை இருந்த ஆட்சியாளர்கள், தேர்தல் நேரங்களிலாவது ஆசிரியர், அரசு ஊழியர்களின் பிரச்னைகளை கேட்டு நிவர்த்தி செய்வர். ஆனால், இந்த அரசு மட்டுமே அரசு ஊழியர், ஆசிரியரின் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி கூட எடுக்கவில்லை.ஆசிரியர்களை நியமித்த ஜெ.,தமிழக அளவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தற்போது வரை 97 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். 


இதில், ஆசிரியர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே 13 லட்சம் பேர்.வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வழங்காமல், ஏற்கனவே ஆசிரியர் நியமனத்தில் இருந்த நடைமுறையை மாற்றி, வயது வரம்பு 40 என நிர்ணயித்துள்ளது. அதேநேரம் தேசிய கல்வி கவுன்சில் ஆசிரியர் பணிநியமனத்தை ஆயுட்காலம் முழுவதும் நடத்த கூறுகிறது. 


இது போன்ற முரண்பாடான தகவல்களை தமிழக அரசு வெளியிடுகிறது. முதல்வராக ஜெ., இருந்த போது கூட 19 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணிநியமன உத்தரவை வழங்கினார். இந்த அரசு ஒரு ஆசிரியர் பணி நியமனம் கூட செய்யவில்லை.ஆசிரியர் மாறுதலில் முறைகேடு கொரோனாவை காரணமாக கூறி, ஆசிரியர் பணியிட மாறுதல் பொது கவுன்சிலிங்கை நடத்தாமல், விதிகளை மீறி மறைமுக மாறுதல் வழங்குகின்றனர். இதற்காக பல லட்ச ரூபாய் வரை வசூல் நடக்கிறது. பள்ளிகளை உரிய சுகாதார விதிப்படி சுழற்சி முறையில் நடத்த ஆசிரியர்கள் தயாராக உள்ளோம், என்றார்.

45 comments:

  1. என்ன மோசஸ் .. டிரான்ஸ்பர் டெண்டர் கைமாறிவிட்டதோ... புலம்பி தள்ளுறியே

    ReplyDelete
  2. Trb give appointment offline PG trb chemistry 2017 11 persons only. Why didn't puplish the list TRB website online. Please give court given 6 marks in all ....

    ReplyDelete
    Replies
    1. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஏன் வேலை போடவேண்டும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்கும் அதிமேதாவிகளே! இந்த வாய்ப்பு பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்க வில்லை என்றால் அனைத்து பணியிடங்களையும் இந்த ஆட்சி நிரப்பி இருக்குமா? 7 ஆண்டுகளாக தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று வேலை கிடைக்காமல் 80000 பேர். எந்த வேலைக்கும் அறிவிப்பு வரும்.அதில் பல குழப்பங்கள் நடக்கும். வழக்கு நீதிமன்றம் செல்லும். ஆக மொத்தம் பணி நியமனம் நடப்பதில்லை. இப்படிப்பட்ட சூழலில் வாரத்திற்கு 3 நாட்கள், மாதத்திற்கு 12 நாட்கள் என்ற குழப்பமான பணிநியமனத்தைக் கொண்டு வந்து வயதாகியும் வேலை கிடைக்காமல் இருந்துவந்தவர்கள் ஏதோ வாய்ப்பு வருகிறதே என்று இதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கொச்சைப் படுத்தும் நீங்கள் 40 வயதிற்கும் மேல் வேலை இல்லை என்று பி.எட் படித்து தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்று ஆசிரியர் வேலைக்காகவே இன்னும் தேர்ச்சி பெற உழைத்துக் கொண்டிருப்பவர்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்ட விசயம் உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? பல பள்ளிகளில் பகுதி நேர கணிப்பொறி ஆசிரியர்கள் எவ்வளவு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் (இரவு பகலாக IFHRMS) தெரியுமா இந்த கொரோனா விடுமுறையிலும்? அரசிடம் போராடுங்கள். 7700க்காக பத்தாண்டுகளைத் தொலைத்தவர்கள் ஏழைகள் மட்டுமே. உங்களுக்காக அரசிடம் கேளுங்கள். இப்போதும் சத்துணவு சமையலர் பணிக்கே முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முதற்கொண்டு விண்ணப்பிக்கும் அவல நிலை இந்தியாவில் உள்ளது. ஏனெனில் வேலையில்லாத் திண்டாட்டம். மத்திய மாநில அரசுகள் இதைப் பயன்படுத்தி தொகுப்பூதியத்தில் நியமித்து விட்டு கண்ட வரிகளையெல்லாம் போட்டு அவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ வேண்டும் என நினைக்கிறார்கள். படித்தவர்கள் 7000 8000 என கொத்தடிமைகளாக வாழ்கிறார்கள் (அரசுப்பணி என்ற பெயரில்) இதை உணருங்கள்.

      Delete
  3. Trb give appointment offline PG trb chemistry 2017 11 persons only. Why didn't puplish the list TRB website online. Please give court given 6 marks in all

    ReplyDelete
  4. 2017 Pg trb pass panni velaikku vanthirukean.oru posting kooda poadalia.yena oru pulugal

    ReplyDelete
  5. Panam vangikondu maraimugamaka velai kodukkura party ya ka thaan intha arasu irukkirathu teacher post

    ReplyDelete
  6. நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டனர்
    தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
    முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
    தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது
    இரண்டாம் கட்டமாக தாள்1 க்கு 22500 பணியிடமும் தாள் 2 க்கு 41240 பணியிடமும் TET
    மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கப்படுகின்றது

    ReplyDelete
    Replies
    1. இது உண்மையா சார்?

      Delete
    2. பாவம்.. முற்றிவிட்டது.

      Delete
  7. நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டனர்
    தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
    முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
    தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது
    இரண்டாம் கட்டமாக தாள்1 க்கு 22500 பணியிடமும் தாள் 2 க்கு 41240 பணியிடமும் TET
    மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கப்படுகின்றது

    ReplyDelete
    Replies
    1. ஏன் இந்த கோலா வெரி

      Delete
  8. நீண்ட நாட்களாக 2013,2017,2019 ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டனர்
    தற்போது இவர்களுக்கு நல்லது நடக்கும் விதமாக வருகின்ற நவம்பர் 20 ம் தேதி பேச்சிவார்த்தைக்கு அழைத்துள்ளனர்
    முதல் கட்டமாக தாள்1 க்கு 3500 பணியிடமும்
    தாள்2 க்கு 5000 பணியிடமும் அதிக மதிப்பெண் பெற்ற 2013,2017,2019 TET தேர்வர்கள் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கபடுகின்றது
    இரண்டாம் கட்டமாக தாள்1 க்கு 22500 பணியிடமும் தாள் 2 க்கு 41240 பணியிடமும் TET
    மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் பெறுவார்கள் என எதிர்பார்கப்படுகின்றது

    ReplyDelete
    Replies
    1. இந்த தகவல் உண்மையா?

      Delete
    2. இந்த தகவல் உண்மையா?

      Delete
    3. Manasachi vena ....oru avlavuku adichi vidalam athuku nu ivlo va

      Delete
  9. இது உண்மையானா செய்தியா friends

    ReplyDelete
  10. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பணிநாடுனர்களுக்கு 2013,2017,2019 ஜனவரி 2021 பணி நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளது. தாள் 1 க்கு 2000 பணியிடங்களும் தாள் 2 க்கு 3000 பணியிடங்களும் நிரப்ப வாய்ப்பு உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Compatative exam irukkumaa Rohith

      Delete
    2. தற்போது வரை competitive exam (trt) குறித்து எந்த பரிசீலனையும் அரசிடம் இல்லை.

      Delete
    3. Conform posting poduvangala jiii

      Delete
  11. இப்போது வரை நியமன தேர்வு தானே உள்ளது... அப்பறம் எப்படி ஜனவரி ல நியமனம் இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் நியமனத் தேர்வு அரசாணை வெளியீட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆகிவிட்டது. ஆனால் ஒரு தேர்வு கூட நடைபெறவில்லை. தற்போது சட்டமன்றத் தேர்தலுக்கு ஆறு மாதங்கள் தான் இருப்பதால் ஆசிரியர் நியமனத் தேர்வு நடத்த போதிய நாட்கள் இல்லை. அதனால் அரசாங்கம் நினைத்தால் திடீரென அரசாணை நீக்கி விரைவில் புதிய முறையில் ஆசிரியர் நியமனம் 100% செய்ய வாய்ப்புள்ளது.

      Delete
    2. Appo posting entha method la irukkum bala sir. 3 batch um mix panni poduvangalaaaa...

      Delete
    3. கண்டிப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு இரண்டு மாதங்களில் 2013,2017,2019 அனைவரும் சேர்த்து தான் பணி நியமனம் செய்வார்கள்.

      Delete
    4. Nanba purali i kelapathinga....

      Delete
    5. Bala sir thanks for ur information.

      Delete
  12. Special teachers remainig post fill panna second list poduvangala sir

    ReplyDelete
  13. இந்த ஆட்சி ஆசிரியர்கள் நியமனம் நடைபெற வாய்ப்பு இல்லை மன திருப்திக்காக சொல்லிக் கொள்ள வேண்டியது தான்

    ReplyDelete
  14. இவர்களது ஆட்சியில் தான் பி.எட் கல்லூரிகளை தனியாருக்குத் தாரை வார்த்தார்கள். வயது வரம்பை 57 வரை உயர்த்தி பி.எட் படிக்கலாம் என்று அனைவரையும் பி.எட் கல்லூரிகளில் சொத்துக்களை விற்று பி.எட் படிக்க வைத்து பி.எட் கல்லூரிகளின் சேர்க்கையை உயர்த்தி அவர்களை வாழ வைத்தார்கள். தற்போது தகுதித் தேர்வு என்று ஒன்றைக் கொண்டுவந்து சமீப பாடத்திட்டத்தில் படித்த சிறுவயதினரை மட்டும் (மகத்தான மதிப்பெண் முறையைக் கொண்டுவந்து) வேலைக்கு அமர்த்தும் வகையில் கொண்டுவந்தார்கள். இதிலும் சில வருடங்களுக்கு முன்பு படித்தவர்களுக்கு தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் பணி கிடைக்கவில்லை. இப்படியே 30 வயதைக் கடந்தவர்களை 40-க்கும் மேலாக ஆக்கிவிட்டு இப்போது நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்கள். எதிர்காலத்தையே நாசமாக்கிவிட்டார்கள். இதில் பலர் நல்ல அனுபவங்களைக் கொண்டிருந்தாலும் நல்ல திறமையானவர்கள் என்று தனியார் பள்ளிகளில் அரசுப்பணிக் கனவோடு பணியாற்றிக் கொண்டிருந்தாலும் அவர்களின் எதிர்காலத்தையே கெடுத்துவிட்டார்கள். ஏன் இப்படி அனைத்திலும் வயிற்றில் அடிக்கிறார்கள்? ஏழைகளுக்கு கனவே அரசுப்பணி தான். அவர்களின் கனவைத் தகர்த்தால்???????

    ReplyDelete
  15. பாஸ் பன்னவங்களுக்கு வயது அடிப்படையில் வேலை போட்டா நல்லா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. Chance ae illa. Mark base than poduvanga.

      Delete
    2. எந்த வேலையும் வயது அடிப்படையில பணி நியமனம் செய்யப்பட்டார்கள். கண்டிப்பாக மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்வார்கள்.

      Delete
  16. Please Avoid another exam for posting as teacher.How many times we writing exam? First B.ed eligible for posting next Tet next....... you candidates can face many exams? We ?

    ReplyDelete
  17. தற்போது உள்ள உடற்கல்வி ஆசிரியர் காலி பணியிடம் நிரப்ப ஆவன செய்யுங்கள்.

    ReplyDelete
  18. Not you that is young candidates

    ReplyDelete
  19. 40 வயது என்னாச்சு

    ReplyDelete
  20. TRB வயது நிர்ணயம் ரத்து ஆகுமா?
    யாராவது சொல்லுங்க?
    ௨௦௧௯ TRB la ௭௭ mark
    இப்ப வயது ௪௬

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி