தேசியகீதமே பாட தெரியாத அவலம்... கல்வி அமைச்சர் ராஜினாமா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2020

தேசியகீதமே பாட தெரியாத அவலம்... கல்வி அமைச்சர் ராஜினாமா


பீகார் கல்வித்துறை அமைச்சர் மேவலால் சவுத்ரி 3 நாட்களிலேயே தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


பீகார் முதல்வராக 4-வது முறையாக மூன்று நாட்களுக்கு முன்னர் நிதிஷ்குமார் பதவியேற்றார். அவருடன் பாஜக, ஜேடியூ, கூட்டணி கட்சிகளின் 14 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.


இதில் ஜேடியூ மூத்த தலைவர்களில் ஒருவரான மேவலால் சவுத்ரியும் ஒருவர். அவருக்கு கல்வித்துறை இலாகா ஒதுக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே ஊழல் புகாரில் சிக்கி விசாரணைக்குட்படுத்தவர் மேவலால்.

அவருக்கு எப்படி அமைச்சர் பதவி தரலாம் என்கிற கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின. இன்னொரு பக்கம், தேசிய கீதத்தை பாடதெரியாமல் மேவலால் சவுத்ரி தடுமாறும் வீடியோ ஒன்றை ஆர்ஜேடி சமூக வலைதளங்களில் வெளியிட்டது.

இத்தகைய அடுத்தடுத்த புகார்களால் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு கடும் நெருக்கடி ஏற்ப்பட்டது. இதனையடுத்து மேவலால் சவுத்ரி தமது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

5 comments:

 1. குறைந்த‌ப‌ட்ச‌ம் விழாவிற்கு வ‌ந்த‌ மாண‌வ‌ர்க‌ளிட‌மாவ‌து கேட்டு தெரிந்து கொண்டு பாடி இருக்க‌லாம்...இந்தியாவிற்கே அவ‌மான‌ம்...இது போன்று நிறைய‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் உள்ள‌ன‌ர்...இவ‌ரைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு வாக்க‌ளித்த‌ ம‌க்க‌ளைச் சொல்ல‌ வேண்டும்...என்ன‌த்த‌ சொல்ல‌...

  ReplyDelete
 2. தமிழ் நாட்டில் இந்த டெஸ்ட் வைங்க...
  நம்ம மினிஸ்டர் பின்னி பெடலெடுப்பார்....

  ReplyDelete
 3. தமிழை வைத்து பழுப்பு நடத்தும் தலையாரி களை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடச்சொன்னால் பிறகு தெரியும்

  ReplyDelete
 4. Sengottayana paada vachi seruppala adithu thurathuvom

  ReplyDelete
 5. Ne rosamana manusan tamilnattilaium eruke dubakkoor

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி