இரயில்வே மேல்நிலை பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2020

இரயில்வே மேல்நிலை பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை!

 


விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் : 1. பகுதிநேர பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமூக அறிவியல் கற்பிப்பதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்தப்படுவார் . பகுதி நேர முதுகலை ஆசிரியர்கள் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு இயற்பியல் / வேதியியல் / உயிரியல் கற்பிப்பதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்தப்படுவார்கள் . 2. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் இணையதளம் மூலம் வகுப்புகளைக் கையாளவும் , தேர்வுகளை நடத்தவும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும் . 3. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு 40 நிமிட கால அளவுள்ள 30 பாடவேளைகள் வழங்கப்படும் . 4. தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் மதிப்பீட்டுப் பணிகள் உள்ளடக்கிய கல்வித்துறை தொடர்பான அனைத்து வேலைகளையும் செய்ய ஈடுபடுத்தப்படுவார்கள் . இதற்காக பாடவேளைக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை தவிர்த்து மேல் ஊதியம் ஏதும் வழங்கப்படாது . 5. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பகுதி நேர ஆசிரியர்களுக்கும் மாதம் ஒன்றிற்கு ரூ . 26,250 / - மட்டும் தொகுப்பூதியமாக வழங்கப்படும் . 6. பகுதி நேர ஆசிரியர்கள் இதர சலுகைகளான விடுமுறை , மருத்துவ வசதி , பயண அனுமதிகள் மற்றும் கூடுதல் படிகள் முதலியவற்றிற்கு உரிமை கோர முடியாது . 7. பகுதிநேர ஆசிரியர்கள் இரயில்வே ஆசிரியர்களாக கருதப்படமாட்டார்கள் . அவர்கள் நிரந்தர முறையில் நியமிக்கப்பட உரிமையோ அல்லது கோரிக்கை விடுக்கவோ முடியாது . இதற்கான உறுதிமொழி வின்னப்பத்தாரரால் ஏற்கப்பட வேண்டும் . 8. பகுதி நேர ஆசிரியர்களுக்கான இதர நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகள் நியமனத்தின் போது அறிவிக்கப்படும் . 9. பகுதி நேர ஆசிரியர்கள் 07 ( ஏழு ) பணி நாட்களுக்கு குறையாமலும் 200 ( இருநூறு ) பணி நாட்களுக்கு மிகாமலும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் . இந்நடைமுறை , எந்நேரத்திலும் , எக்காரணம் கருதியும் , எந்தவொரு அறிவிப்பும் இன்றி விலக்கி கொள்ளப்படலாம் . 

6 comments:

  1. கொடுமையான விளம்பரம்

    ReplyDelete
  2. Why PG applicants are expected to be a TET pass holder?

    ReplyDelete
  3. இன்னும் இந்த தேசத்தில், கொத்தடிமை ஆசிரியர்கள் நியமனம் செய்ய முயற்சியா,
    ...ஏற்கனவே 1997_ 2000 வரை,
    பட்டியல் இனப்பிரிவில்,
    இதே முறையில் bonded labours
    Teachers,
    இனி யாரையும் அப்படி செய்ய வேண்டாம்...

    ReplyDelete
  4. இந்த கண்டிஷனுக்கு வேலைக்கு போவதை விட நாலு ஆட்டைவாங்கி மேச்சாவது முதலாலியா வாழலாம்.

    ReplyDelete
  5. இந்த நாசமா போன செய்தி எல்லாம் கல்வி செய்தியில் எந்த கிடைக்கும் பயபுல்ல அப்லோடு செய்யறது.

    ReplyDelete
  6. Please give me railway teacher recruitment advertisement clearly

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி