லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கிலிட்டால் என்ன?...உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி - kalviseithi

Nov 2, 2020

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கிலிட்டால் என்ன?...உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி

 


விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய 40 ரூபாய் லஞ்சம் கேட்பதாக  பரவலாக விவசாயிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர். இதற்கிடையே, தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க கோரி சென்னையை சேர்ந்த சூரியப்பிரகாசம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு  பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கு கடந்த மாதம் 10-ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு உயர் அதிகாரி தமது ஊதியத்தை தாண்டி லஞ்சமாக பெறுவது  பிச்சை எடுப்பதற்கு சமம் என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். தொடர்ந்து, கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் எத்தனை கொள்முதல் நிலையங்கள் உள்ளன. எத்தனை கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்கப்படுகிறது.  விவசாயிகளுக்கு என்ன அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பதை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். 


இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் 800 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. மேலும், நெல்கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க போதிய  நடவடிக்கை எடுத்து வருகிறது. நெல்கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறாக செய்தி என்று தெரிவித்திருந்தது. அறிக்கையில் அடுத்த பக்கம் முறைகேடுகளில் ஈடுபட்ட 150  அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  


அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள் கடும் கோபம் அடைந்து, ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கவில்லை என்று தகவல் தெரிவித்துவிட்டு, அடுத்த வரியில் லஞ்சம் வாங்கியதாக 150 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  குறிப்பிட்டார். நீதிமன்றத்தை அரசு அதிகாரிகள் ஏமாற்றும் நோக்கத்துடன் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இது ஏற்புடையது அல்ல. 


இரவு, பகல் பாராமல் தங்கள் விவசாய நிலங்களில் பாடுபட்டு விவசாயம் செய்து பிறருக்கு உணவூட்டும் வகையில் தங்களது நெல்களை விற்பனை மையங்களுக்கு கொண்டு வரும் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை  தூக்கிலிட்டால் என்ன? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், லஞ்சம் வாங்குவது புற்றுநோயைவிட கொடியது. லஞ்சம் நாட்டை புற்றுநோய் போல் அரித்துக்கொண்டிருக்கிறது என்றனர். மேலும், தமிழகத்தில் உள்ள நெல்கொள்முதல்  நிலையங்களில் லஞ்சம் வாங்கும் எத்தனை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


வழக்குப்பதிவு செய்யப்பட்ட அதிகாரிகள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகள் வாங்கிய ஊழியம் என்ன, அதே காலகட்டத்தில் அரசு அதிகாரிகளின் ஊழியம் என்ன? என்ற என்ற புள்ளி விவரங்களுடன்  தமிழக அரசு கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

15 comments:

 1. Lanjam vangupavargalai seruppala adithu vittu lanjam koduka vendum illai endral pichai endru kettu pera vendum

  ReplyDelete
 2. Lanjam vangum naaigalai kallal adithu kolla vendum

  ReplyDelete
 3. Ipa nan ceo office la recognition renewal panna ellam correct ah irunthum lanjam kuduka than vanthuruken kevalama iruku lanjam vangaravanuku lanjam kudukaravan payakaran

  ReplyDelete
 4. Arumaiyana karuthu. Thookil pottal endha field laium maximum problem varave varadhu. First government office la cctv camera fix pannanum.

  ReplyDelete
 5. அப்படியே கவர்னர் எம்பி பதவிக்காக தீர்ப்பு சொல்றாங்களே அவங்கள என்ன பன்னலாம்னு சொல்லிடுங்க

  ReplyDelete
 6. அந்த திருட்டு முண்டங்கள் மற்றும் முண்டச்சிகளை மொட்டையடித்து முச்சந்தியில் செருப்பு மாலை போட்டு அம்மணமாக நிற்க வைத்தால் கூட வெட்கமில்லாமல் பல்லைக் காட்டி இளிக்குமே தவிர திருந்தாதுங்க..

  ReplyDelete
 7. Removed from service correct decision

  ReplyDelete
 8. லஞ்சம் வாங்குவதை விட பிச்சை எடுக்கலாம்

  ReplyDelete
 9. 95% நீதிபதிகளுக்கு தூக்கு கயிறு ரெடி. அதிகமாக லஞ்சம் பெறும் இடங்களில் நீதிமன்றமும் ஒன்று. ஜெயலலிதா ஊழல் வழக்கில் என்ன நடந்தது !

  ReplyDelete
 10. Lanjamvanguravanaikaarimuzhiyungal

  ReplyDelete
 11. That kind of people Dismissed in job don't give suspension. And also recover all movable and immovable property.

  ReplyDelete
 12. எல்லா துறைகளிலும் லஞ்சம் இல்லாமல் வேலை நடப்பது இல்லை... முக்கியமாக கல்வி துறைகளிலும் அதிகம் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது

  ReplyDelete
 13. அனைத்து துறைகளிலும் லஞ்சம் தான்,இவர்கள் சாதாரண மனிதர்கள் ,இதையும் தாண்டி ஊழல், இலஞ்சம் வாங்கும் பெரிய அரசியல் வாதிகள்,மந்திரிகள் ,நீதிபதிகள் இவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது

  ReplyDelete
 14. தான் ஓர் உதாரணமாக இருந்தால் மட்டுமே கருத்தோ தண்டனையோ மற்றவர்களுக்கு வழங்க முடியும்...

  ReplyDelete
 15. அப்படி தூக்கில் போட ஆரம்பிச்சா govt staffla arasiyalvathikal பெரும்பாலனோர்களை போட வேண்டி வரும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி