காவலர் தேர்விற்கு செல்வோர் கவனத்திற்கு... - kalviseithi

Nov 30, 2020

காவலர் தேர்விற்கு செல்வோர் கவனத்திற்கு...


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் , சிறைக்காவலர் , தீயணைப்பாளர் என மொத்தம் 10,906 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டு இதற்கான எழுத்து தேர்வு டிச . , 13 ல் நடைபெற உள்ளது . 

இதற்கான தேர்வுமுறை , தேர்வில் கேட்கப்படும் வினாக்களின் மாதிரியில் மாணவர்களின் நலன் கருதி ' தினமலர் ' நாளிதழ் கடந்த 68 நாட்களாக மாதிரி வினாத்தாள் தயாரித்து வழங்கி வருகிறது . இது கடந்த சில வருடங்களாக கேட்கப்பட்ட வினாக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது . தேர்வுமுறை எழுத்து தேர்வு முதலில் நடைபெறும் . மொத்தம் 80 வினாக்கள் இருக்கும் . கொள்குறி வகையில் தேர்வு நடைபெறும் . இதில் பொது அறிவு 50 மற்றும் உளவியல் வினாக்கள் இருக்கும் . இதற்கு மொத்த மதிப்பெண்கள் 80 .

 எழுத்து தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைப்பு இல்லை . ஆகையால் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும் . நேர மேலாண்மை மொத்த தேர்வு நேரம் 80 நிமிடங்கள் . உளவியல் பகுதியில் மட்டும் 30 வினாக்கள் இருப்பதனால் நேர மேலாண்மையை முறையாக பின்பற்றினால் தான் குறித்த நேரத்தில் தேர்வை எழுதி முடிக்க முடியும் . முதலில் நன்கு தெரிந்த கேள்விகளுக்கு விடையளிக்கவும் , பிறகு சந்தேகமான கேள்வி களுக்கு யோசித்து விடையளிக்கலாம் . 

அதிலும் குறிப்பாக முதன்முறையாக இத்தேர்வை எழுதும் மாணவர்கள் குறைந்தது ஐந்து மாதிரி தேர்வுகளை நேரக் கட்டுப்பாடுடன் எழுதிப் பார்க்க வேண்டும் . அப்போது தான் நேர மேலாண்மையின் அவசியத்தை புரிந்து கொள்ள முடியும் . தேர்விற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் புதிய பகுதிகளை படிப்பதை விட ஏற்கனவே படித்த பகுதிகளை நினைவுப்படுத்துதல் சிறந்தது . 

கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட ஒரிஜினல் வினாத்தாள்களை கண்டிப்பாக பார்க்கவும் . அதில் கேட்கப்பட்ட வினாக்களின் அடிப்படையில் மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்கவும் . கட் - ஆப் மதிப்பெண் கட் - ஆப் மதிப்பெண்ணை பற்றி இப்போதே எதுவும் யோசிக்க வேண்டாம் . ஏனெனில் பொதுவாக கட்ட ஆப் மதிப்பெண் என்பது ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் தற்போது நடைபெற இருக்கும் தேர்வின் வினாத்தாளின் கடினத்தன்மையை பொறுத்து ஆண்டுக்கு ஆண்டு வேறுபடும் . 

எனவே நீங்கள் முந்தைய ஆண்டு கட் - ஆப் மதிப்பெண்ணோடு ஒப்பீடு செய்ய வேண்டாம் . நம்முடைய எண்ணம் அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையளிப்பதில் மட்டும் இருப்பது நல்லது . பொது அறிவு பொது அறிவு பகுதிக்கு 6 முதல் 10 வரை உள்ள பள்ளி சமச்சீர் புதிய பாடப்புத்தகங்கள் போதுமானது . புத்தகத்தில் உள்ள அனைத்தையும் படிக்காமல் சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள பாடத்திட்டத்தில் உள்ள தலைப்புகளை மட்டும் படித்தால் போதுமானது . ஒவ்வொரு பாடத்திற்கு பின்பு கேட்கப்பட்டுள்ள வினாக்கள் , புத்தகத்தில் தனிமைப்படுத்தி காட்டியுள்ள துணுக்கு செய்திகள் , “ உங்களுக்கு தெரியுமா " என்ற தலைப்பில் உள்ள செய்திகள் , மேலும் அட்டவணைப்படுத்தி கொடுக்கப் பட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கவும் . 

வரலாற்று நிகழ்வுகளை காலவரிசைப்படி படித்து நினைவு படுத்துதல் நன்று . முக்கிய போர்கள் நடந்த ஆண்டு , இடம் , யார் யாருக்கு இடையில் நடைபெற்றது போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் . அறிவியல் பகுதிகளில் உள்ள முக்கிய விதிகள் , உபகரணங்கள் , கண்டுபிடிப்புகள் மற்றும் விஞ்ஞானிகள் பெயரை நன்கு நினைவு படுத்தவும் . உலோக கலவைகள் , முக்கிய தாதுக்கள் , அமிலம் , காரம் , உப்பு மற்றும் தனிமவரிசை அட்டவணை தெரிந்து கொள்ளவும் . மனித நோய்கள் , வைட்டமின்கள் , ரத்த செல்கள் பற்றி கவனம் செலுத்தவும் . கணித பாடத்தில் உள்ள முக்கிய சூத்திரங்களை தேர்வு வரை திரும்ப திரும்ப நினைவு படுத்தவும் . “ தன்னால் இந்த தேர்வில் வெற்றி பெற முடியும் ” என்ற உயர்ந்த எண்ணத்துடனும் , தன்னம்பிக்கையுடனும் , திட்டமிட்டு தேர்வை அணுகினால் நாமும் காவல் துறையின் காக்கி உடையை அலங்கரிக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை !!


1 comment:

  1. Pc exam ellaroda lifem maathum kandippa idhula pass pannadhan enlifeku insurance...then en ambition kandippa naa pass panven... Hardwrk potruken.. Unga indha add oru exam hallkula porapa epdiviruknum passivity important apdindra maadhiri irukku thanks.. For ur motivation 🙏

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி