தமிழக கருவூலங்களில் புதிய சாஃப்ட்வேர் முறையை அமல்படுத்த தடை கோரிய வழக்கு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2020

தமிழக கருவூலங்களில் புதிய சாஃப்ட்வேர் முறையை அமல்படுத்த தடை கோரிய வழக்கு!

 


கருவூலங்களில் புதிய சாஃப்ட்வேர் முறையை அமல்படுத்த தடை கோரிய வழக்கில் தமிழக நிதித்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ரவீந்திரநாத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அதில் தமிழகத்தில் கருவூலங்களில் ஆட்டோமேட்டிக் டிசரி வெல் பாசிங் சிஸ்டம் என்ற சாஃப்ட்வேர் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2017ம் ஆண்டு தமிழக நிதித்துறை மூலமாக பைனான்சியல் தி ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் என்ற சாஃப்ட்வேர் முறையை மெட்ரோ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட முதல்கட்ட பணிகள் தொடங்கியது. இதன்முலம் கருவூலங்களில் வழங்கப்படும் ஊதியங்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்கள் கண்காணிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்திற்கு 2 கோடி ரூபாய் வரை பணம் செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தும் முறையானது முதற்கட்டமாக ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளில் சோதனை ஓட்டமாக நடைபெற்றது. இதில் பல முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த முறையை பயன்படுத்துவதால் ஆகஸ்ட் 31, 2020ம் ஆண்டு 20 சதவீத பென்ஷன் பணம் சரியான கணக்கிற்கு சென்று சேரவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள கருவூலங்களில் புதிய சாஃப்ட்வேர் முறையை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் பழைய சாஃப்ட்வேர் முறையை பின்பற்றுவதற்கு தமிழக அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவானது நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு நிதித்துறை செயலர் மற்றும் தமிழக கருவூல ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

2 comments:

  1. அது மெட்ரோ நிறுவனம் அல்ல விப்ரோ நிறுவனம்....
    ரூபாய்.2 கோடிகள் அல்ல
    பல நூறு கோடிகள்....

    ReplyDelete
  2. அப்படியே தென்காசி S ஜவகர் IASஐ மறந்துடாதீங்க...

    அவர் தான் நடைமுறை படுத்திய அதிகாரி...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி