கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு. - kalviseithi

Nov 20, 2020

கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு.

 

முதல்வர் கணினி தமிழ் விருது பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழக அரசு சார்பில், தமிழ் வளர்ச்சிக்காக, சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குவோரை ஊக்குவிக்கும் வகையில், மென்பொருள் தயாரித்த, தனி நபர் மற்றும் நிறுவனத்திற்கு, 'முதல்வர் கணினித் தமிழ் விருது' வழங்கப்படுகிறது.விருது பெறுபவருக்கு, விருது தொகையாக, 1 லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். விருதுக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருட்கள், 2017, 18, 19ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, www.tamilvalarchithurai.com  என்ற இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள், 'தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்சாலை, எழும்பூர், சென்னை -- 8' என்ற முகவரிக்கு, டிச., 31க்குள் வந்தடைய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 -- 28190412, 28190413 என்ற தொலைபேசி எண்களை, தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி