தொலைநிலைக்கல்வியில் பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ்வழி படிப்பு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து வழக்கு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2020

தொலைநிலைக்கல்வியில் பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ்வழி படிப்பு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து வழக்கு!

 


தொலைநிலைக் கல்வியில் பட்டம் ெபற்றோருக்கு தமிழ் வழியில் படித்ததற்கான இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்த வழக்கில், பல்கலைக்கழகங்கள் தரப்பில் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:சட்டப்படிப்பை தமிழ் வழியில் முடித்துள்ளேன். டிஎன்பிஎஸ்சி கடந்தாண்டு நடத்திய துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 குரூப் 1 பணியிடங்களுக்கு விண்ணப்பித்தேன். 


முதல்நிலை தேர்வு மற்றும் பிரதான எழுத்துத்தேர்வை முடித்து நேர்முகத்தேர்வில் பங்கேற்றேன். கடந்த டிச. 9ல் வெளியான தேர்வானோர் பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை.தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு எனக்கு வழங்கப்படவில்லை. ஆனால், இந்த இட ஒதுக்கீட்டை தொலைநிலைக்கல்வியில் பயின்றோருக்கு கொடுத்துள்ளனர். தொலைநிலைக்கல்வியில் சில பாடங்கள் ஆங்கிலத்திலும், சில பாடங்கள் தமிழிலும் நடத்தப்படுகிறது. ெதாலைநிலைக் கல்வியில் பயின்ற பலர் டிஎன்பிஎஸ்சியில் இந்த ஒதுக்கீட்டின் மூலம் வேலை பெற்றுள்ளனர்.

எனவே, தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இடஒதுக்கீட்டின் படி, தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கக்கூடாது என்றும், 


குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதித்தும், கல்லூரிக்கு சென்று முழு நேரமாக தமிழ் வழியில் பயின்றவர்களை, தேர்வு செய்து புதிய பட்டியல் வெளியிட்டு, அதன்பிறகே குரூப் 1 பணி நியமனங்களை மேற்கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், இந்த வழக்கில் தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்மனுதாரராக சேர்த்து, அவர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 

2 வாரம் தள்ளி வைத்தனர்.

18 comments:

 1. தொலைநிலை கல்வி பயின்று பலர் பல துறைகளிலும் பணி புரிகிறார்கள். வசதி வாய்ப்பு பொறுத்து.

  ReplyDelete
 2. https://youtu.be/eiio07UJ2iw
  டிஎன்பிஎஸ்சி என்னும் மந்திரச் சாவி

  ReplyDelete
 3. அரசு கல்லூரியில் அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைப்பது இல்லை

  குடும்ப வறுமை காரணமாக பணியாற்றிகொண்டே படிப்பவர்

  என இருதரப்பின்
  வரபிரசாதம் தொலைதூரகல்வி முறை
  அவர்கள் தமிழ் வழி பயின்றுஇ 20%கொடுப்பதில் என்ன தவறு?

  அதிக மதிப்பெண் எடுத்தவருக்கு தானே பணி பிறகு என்ன?

  இன்று தொலைதூரகல்வி 20%எதிர்போர்
  நாளை பணி வாய்ப்பை எதிர்த்து நேரடி கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் பணி வாய்ப்பு என கூறுவீர்களா?நியாயமா?

  ReplyDelete
  Replies
  1. சுயநலமாக வழக்கு தொடுப்பவர்கள் தெளிவான தீர்வினைக் கூற முன்வருவாரா?
   ஏழைகளை பாதிக்காதவாறு பதில் கூற முடியுமா?

   Delete
 4. தெளிவான தமிழ் வழிப் படித்தோருக்கான இட ஒதுக்கீடு தேவைதான்....... அது தவறாக பயன்படுத்துவோருக்காக மட்டுமே...
  அதற்காக தொலைநிலைக் கல்வியில் தமிழ் படிப்பதையே எதிர்ப்பது சரிதானா? சிந்தியுங்கள் வறுமை சூழலில் பலர் தொலைநிலைக் கல்வியில் படிக்கிறார்கள்...... குறிப்பாக திருமணமான கிராமத்துப் பெண்களை நினைத்துப்பாருங்கள்....தமிழையை முழமையாக நம்பி படித்தோருக்கு அந்த இட ஒதுக்கீட்டை வழங்குவது இறைவனின் சட்டப்படி சரியே..... வாய்மையே வெல்லும்..... அறம் தழைத்தோங்குக....
  சிந்தியுங்கள் அன்பர்களே.

  ReplyDelete
  Replies
  1. தமிழ்வழி சட்ட சிக்கல்
   https://youtu.be/wjrhtvnnR0o

   Delete
 5. இங்கு தொலைநிலை கல்வி பிரச்சினை இல்லை...10,+2 ஆங்கில வழியிலும் பட்டப்படிப்பு தமிழ் வழியில் படித்து இடையே நுழைவது தான் பிரச்சினை......

  ReplyDelete
  Replies
  1. மிகச் சரி...அந்தக் களை களையப்படவேண்டியதுதான்..
   ஆனால் ஒட்டுமொத்தமாக தமிழ் வழிக் கல்வியை எதிர்ப்பது சரியல்ல...நன்றி..

   Delete
  2. சரியான பதிவு.. 10,12th தமிழ் வழியாக படித்து பட்டப்படிப்பும் ( Both Regular and Distance) தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டுமே தகுதி ஆனவர்கள்....

   Delete
 6. 10, 12,degree அனைத்தும் தமிழ் வழியாக படித்தவர்களுக்கு (நேரடி அல்லது தொலைநிலை) 20சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

  ReplyDelete
 7. உன் பொண்டாட்டி புள்ள பெத்துகாம போனதுக்கு அடுத்தவன் பொண்டாட்டி புள்ள பெத்துட்டான்னு பொறாமை பட்டா எப்படி தம்பி.

  ReplyDelete
 8. இது பொறாமை உடைய ஒவ்வொருவருக்கும்... சரிதானே
  அது எல்லோருக்கும் எப்படி பொருந்தும்....
  வழக்கும் .... தீர்ப்பும்..
  பொது(நலமா)வாக இருக்கட்டும்.

  ReplyDelete
 9. 10+2+3+2=tenth,twelth, ug,pg,all tamil midium in tn goverment

  ReplyDelete
 10. ரெகுலர் முறை தொலைநிலை முறை எந்த முறையாக இருந்தாலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி