அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது? பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2020

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது? பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.

 


கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் சென்றுவரத் தேவையான போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையை சேர்ந்த முகமது யூனுஸ் ராஜா, கடந்த 2018ல் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், ஏழை நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். ஆகவே, மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் இன்று விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன? கிராமங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சென்று வர போதுமான அளவு போக்குவரத்து வசதிகள் உள்ளதா?.மருத்துவர்களின் ஆரம்ப கால ஊதியமாக எவ்வளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது? இதே நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்து அரசுத் தரப்பில் விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

5 comments:

  1. Sweepers 15000.part time teachers 7700.

    ReplyDelete
    Replies
    1. எம்பா நீங்க அரசியல்வாதிகளிடம் பணம் கொடுத்துவிட்டு ஏந்த நெறிமுறைகளுமே பின்பற்றாமல் வந்துவிட்டு பேசுரீங்களே தனியார்பள்ளி ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்பு எடுத்துகிட்டு எவ்வளவு சம்பளம் வாங்றாங்கனு தெரியுமா? நீங்க என்ன வேலை செய்றீங்கனு நெனச்சிபாருங்க...சரி சரிபட்டு வரலனா வேற வேலை செய்யலாமே நீங்க ஏன் பெருக்ரங்க உங்கள ஒப்பிடுறீங்க

      Delete
    2. You don't compare with sweepers

      Delete
    3. Naga vela seiyarama illaya nu yegaluku theriyum school la nega online online vara work yelam part time computer teachers dha pandrom

      Delete
  2. Panam kuduthom nu soina private school loose unta adhukana evidence Iruka vailaye vada sudadha

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி