பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடும் பணி தொடக்கம்: ஆட்சியர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2020

பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடும் பணி தொடக்கம்: ஆட்சியர் அறிவிப்பு.

 


பள்ளி செல்லாக் குழந்தைகள் உள்ளிட்டோரைக் கணக்கெடும் பணி தொடங்குவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை மாவட்டத்தின் பள்ளி செல்லாக் குழந்தைகள், 6 முதல் 18 வயதுடைய இடைநின்ற குழந்தைகள் மற்றும் 1 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளிக் குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்தப் பணி இன்று (நவ.21) முதல் டிச.10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மண்டல மேற்பாா்வையாளர்கள், ஆசிரியா் பயிற்றுநர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வி தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களால் இந்த கணக்கெடுப்புப் பணி நடத்தப்பட உள்ளது’’.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Ippa yaruma pogala,school reopen innum postponed aanal intha year mudal palli sella kulanthigal yennikkai adigarikum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி