மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டது தி.மு.க: ஏழை மாணவர்கள் மருத்துவப்படிப்பு செலவை திமுக ஏற்கும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2020

மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டது தி.மு.க: ஏழை மாணவர்கள் மருத்துவப்படிப்பு செலவை திமுக ஏற்கும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

 


தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையையும், வெளிப்படுத்தும் வகையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று, சட்டமன்றத்தில் நிறைவேற்றித் தந்தும், அதனை மத்திய அரசிடம் உரிய வகையில் வலியுறுத்திச் செயல்படுத்தும் வலிமையும், அக்கறையுமற்ற அ.தி.மு.க. அரசினால், அரியலூர் அனிதா தொடங்கி ஆண்டுதோறும் பல மாணவமணிகளின் உயிரைக் கொன்று குவித்தது நீட் எனும் கொடுவாள்.


அதனால்தான், தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அ.தி.மு.க. ஆட்சியாளர்களோ, எத்தனை உயிர்கள் போனால் எங்களுக்கென்ன, எங்கள் கல்லாப் பெட்டிகள் நிரம்பி வழிந்திடும் வகையில் கமிஷன் கிடைக்கும் டெண்டர்களை வழங்கும் ஆட்சியதிகாரம் மட்டும் இருந்தாலே போதும் என அடங்கி இருந்தார்கள். நீட் தேர்வால் ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு சிதறடிக்கப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு என அ.தி.மு.க அரசு அறிவித்தது.

அதிலும்கூட, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு பரிந்துரைத்த 10% உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால், தங்களுடைய டெல்லி எஜமானர்களின் எரிபார்வைக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சி, 7.5% என்பதை மட்டுமே எனத் தீர்மானமாக நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிவிட்டு, அத்துடன் தமது கடமை முடிந்து விட்டதாக எண்ணி, பேசாமல் இருந்துவிட்டனர். அங்கே நீண்ட உறக்கம் கொண்டிருந்த உள் இட ஒதுக்கீடு திட்டம், ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.கழகம் நடத்திய மகத்தான போராட்டத்தினாலும், உயர்நீதிமன்றத்தின் கண்டிப்பினாலும் தற்போது விழித்து, செயல்வடிவம் பெற்றுள்ளது.

அந்த அளவில், இதனை தி.மு.கழகமும் வரவேற்கிறது. நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டின்படி, அரசு மருத்துவக்கல்லூரிகளில் 227 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்குரிய கட்டணத்தை அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் செலுத்த முடியாத நிலை இருப்பதால், அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். அ.தி.மு.க அரசை,  மாணவர்களும் பெற்றோரும் நம்பியிருந்த நிலையில், மருத்துவக் கனவு மீண்டும் சிதைக்கப்பட்டுவிடுமோ என்ற மனப் பதற்றத்திற்கும் அச்சத்திற்கும் ஆளாகி இருக்கின்றனர்.

அவர்களின் துயர் துடைக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும் என்பதை நினைவூட்டும் அதே நேரத்தில், மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தி.மு.கழகம், இந்தக் கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை முழுமையாக ஏற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையவிருக்கின்ற தி.மு.கழக ஆட்சியில்,  நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்குரிய சட்ட நடவடிக்கைகள் உறுதியாக மேற்கொள்ளப்பட்டு, அரசுப்பள்ளி - அரசு உதவிபெறும் பள்ளி - கிராமப்புற - ஏழை - பின்தங்கிய - ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மாணவமணிகளின் மருத்துவக் கனவும் நிச்சயமாக நிறைவேறும் என்ற உறுதியினை இப்போதே வழங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

27 comments:

 1. Replies
  1. தலைவர் சொன்னது தேர்தலுக்கு இப்ப நம்ம முதலமைச்சர் சொன்னது எதுக்கு???மக்கள் பணத்தை எடுத்து ஏழை மாணவர்கள் பெயரை சொல்லி வாக்கு வங்கி ஆட்சி செய்றாரே யார் வீட்டு பணம்?வேலை வாய்பை உருவாக்க முடில,ஆசிரியர் நியமனம் செய்து கல்வி தரத்தை மேம்படுத்துனா பரவாயில்லை. எதுக்கு இப்படி உதவி என்ற பெயரில் மக்களை நாசம் செய்றிங்க.

   Delete
  2. தலைவர் சொன்னது தேர்தலுக்கு இப்ப நம்ம முதலமைச்சர் சொன்னது எதுக்கு???மக்கள் பணத்தை எடுத்து ஏழை மாணவர்கள் பெயரை சொல்லி வாக்கு வங்கி ஆட்சி செய்றாரே யார் வீட்டு பணம்?வேலை வாய்பை உருவாக்க முடில,ஆசிரியர் நியமனம் செய்து கல்வி தரத்தை மேம்படுத்துனா பரவாயில்லை. எதுக்கு இப்படி உதவி என்ற பெயரில் மக்களை நாசம் செய்றிங்க.

   Delete
 2. திமுக செய்வதை சொல்லும்
  ஆசிரிய சமுதாயமாக இருந்தாலும் சரி
  மாணவ சமுதாயமாக இருந்தாலும் சரி
  முன் நிற்கும்! !!! இயக்கம்

  ReplyDelete
 3. Part time teachers ku help panuga pls 🥺

  ReplyDelete
 4. M.K.S Sir ..you are Great sir..

  ReplyDelete
 5. Very nice 10 years ah atchi pannathu pothumda samiii.... Tamil nadu has expect change in 2021

  ReplyDelete
 6. Part time teachers pathi yarachum pesuga pls

  ReplyDelete
  Replies
  1. Ada chi ....nee part time teachers illa...ippudi pannadha part time teachers manam poga neega ippudi pesuringa but nannum part time teachers illa...irrudhalum ippudiya?

   Delete
  2. Ama part time teachers naga romba pavam

   Delete
 7. தேர்தல் வந்துடுச்சு. இனிமேல் பலநாடகங்கள் ஆரம்பமாகும்

  ReplyDelete
 8. தேர்தல் வந்துடுச்சு. இனிமேல் பலநாடகங்கள் ஆரம்பமாகும்

  ReplyDelete
 9. Ennum thirunthalana 10 pathithayhu pathalaya sir ethana elangar valkaiye nasam panitanka admk yen sir ungalukku kolavery

  ReplyDelete
  Replies
  1. Iam not support in admk. But dmk is very worst. Because stalin -la avlo worth illa.

   Delete
 10. 7 ஆண்டுகளாக அரசு கல்லூரிகளில் 80% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பெயரளவுக்கே அரசு கலைக்கல்லூரிகள் செயல்படுகின்றன. 5ஆம் வகுப்பு தேர்வை விட கல்லூரிகளில் தேர்வுகள் மோசமாக நடக்கின்றன.

  ReplyDelete
 11. பேசாம கல்லூரிகளை மூடிடலாம்

  ReplyDelete
 12. Pg trb 2ம் பட்டியல் பற்றி ஸ்டாலின் ஏதாவது நல்ல செய்தி கூறினால் அது முதல்வர் கவனத்திற்கு வரும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி