அண்ணா பல்கலை., பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணி நியமனங்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - kalviseithi

Nov 6, 2020

அண்ணா பல்கலை., பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணி நியமனங்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

 


அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணி நியமனங்கள், அவற்றுக்கு எதிரான வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு எஸ்.சி, எஸ்டி பிரிவு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு செயலர் நாகூர்கனி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

அண்ணா பல்கலைக்கழகத்தில் செப்.30-ல் பேராசிரியர், உதவி பேராசிரியர், நூலகர், உடற்கல்வி ஆசிரியர், உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பு விதிப்படி இல்லை. பல்வேறு குளறுபடிகள் உள்ளன.

இதனால் மத்திய கல்வி நிறுவனச் சட்டப்படி எஸ்.சி, எஸ்டி பிரிவில் அனைத்து பிரிவினரும் பயன்படும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிட்டு பணி நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்து, அண்ணா பல்கலைக்கழக பணி நியமனங்கள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. மனு தொடர்பாக மத்திய மனிதவளத்துறை, மாநில உயர் கல்வித்துறை செயலர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி