ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை: சிபிஎஸ்இ அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2020

ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை: சிபிஎஸ்இ அறிவிப்பு

 


10-ம் வகுப்பை முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை  வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:


''மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை  வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-ம் வகுப்பை முடித்த மாணவிகள் இதற்குத் தகுதியானவர்கள் ஆவர். சிபிஎஸ்இ  மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகள் இந்த உதவித்தொகைத் திட்டத்துக்கு விணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி டிசம்பர் 10 ஆகும். விண்ணப்பப் படிவத்தைப் புதுப்பிக்கச் சமர்ப்பிக்க வேண்டிய தேதி டிசம்பர் 28 ஆகும்.

10-ம் வகுப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ள மாணவிகள் மற்றும் 11 மற்றும் 12-ம் வகுப்பை சிபிஎஸ்இ மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் இத்ற்குத் தகுதியானவர்கள். எனினும் கல்வியாண்டில் மாத்ந்தோறும் கல்விக் கட்டணம் ரூ.1,500-க்கு ம்மிகாமல் இருக்க வேண்டும். இந்தியக் குடிமகன்கள் மட்டுமே இந்த உதவித் தொகைக்குத் தகுதியானவர்கள்.

பெண் குழந்தைகளிடையே கல்வியை ஊக்குவிக்கும் பெற்றோரின் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாகவும் திறமையான மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் உதவித்தொகை வழங்கப்படுகிறது''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: cbse.nic.in.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி