Breaking Now : தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் டிச. 31 வரை நீட்டிப்பு - பள்ளிகள் திறப்பா ?முழு விவரம்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2020

Breaking Now : தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் டிச. 31 வரை நீட்டிப்பு - பள்ளிகள் திறப்பா ?முழு விவரம்...

 தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் டிசம்பர் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு இல்லை. எனவே தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை.


* டிசம்பர் 14 முதல் சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி


* தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7 முதல் தொடங்கப்படும் 


* மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் டிசம்பர் 7 முதல் வகுப்புகள் தொடங்கும்


* விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதி


* டிசம்பர் 14ஆம் தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளை பொதுமக்களுக்கு அனுமதி


* வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாத்தலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி


* டிசம்பர் 1 முதல் உள்ள உள்அரங்கங்களில் சமுதாய ,அரசியல், பொழுதுபோக்கு, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 


* அதிகபட்சம் 200 பேர் பங்கேற்கும் வண்ணம் உள்ள அரங்கங்களில் மட்டும் கூட்டம் நடத்திக் கொள்ளலாம்.கூட்டங்களில் அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கலாம்கூட்டங்கள் நடத்த காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெறுவது அவசியம்.






13 comments:

  1. தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை எதிரிக்கு கூட வரக்கூடாது. இதுவும் கடந்து போகும் என்ற மன தைறியத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள் தோழர்களே!

    ReplyDelete
    Replies
    1. If you are interest with part time job

      Call 9943327600

      Delete
    2. நல்ல மனம் வாழ்க

      Delete
    3. தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள்.சம்பளம் அவர்கள் தானே தரவேண்டும்.நான் கட்டணம் செலுத்தி இருக்கிறேன். அந்த நிர்வாகத்திடம கேட்பது உங்கள் உரிமை.

      Delete
    4. பல ஆசிரியர்களின் வேலையை விட்டு தூக்கிவிட்டார்கள்.5000 வேலை செய்கிற புதிய ஆசிரியர்களை நியமித்து கொண்டார்கள்

      Delete
  2. Please Tamilnadu Government just Think about the Matriculation school teacher about thier daily life.

    ReplyDelete
  3. தனியார் சுயநிதி பள்ளிகளில்,கற்பித்தல் நடைபெறாத நிலையில், 25% அட்மிஷன், க்காண,
    பணத்தை தமிழ்நாடு அரசு,
    தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு,
    வாழ் ஊதியமாக குறைந்தபட்சம்,
    ரூ 6000/ மாதம் தோறும் வழங்க வேண்டும்.

    ReplyDelete
  4. Part time teachers ku help panuga pls 🥺

    ReplyDelete
  5. எல்லா private school teacher unga distric collector and ceo kitta pettion குடுங்க

    ReplyDelete
    Replies
    1. செங்கோட்டையன் தான் கல்விக்கு கிடைத்த துரதிஷ்டம்
      மாணவர்கள் ஆசிரியர்கள் வாழ்க்கை கேள்விக்குறி???????????????????????????????????
      திமுக மலரட்டும்

      Delete
  6. புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு,அங்கு கொரானா வராதாம்,தமிழ்நாடு லண்டன் பக்கத்தில் இருக்குல அதனால் இங்குதான் பரவுமாம்,நல்ல அரசாங்கம்

    ReplyDelete
  7. உலகில் எங்கோ ஒரு பகுதியில் வைரஸ் இருக்க தான் செய்யும்,அதற்காக பள்ளிகள் திறக்க வில்லை எனில் மாணவா்கள் நிலை?தனியார் பள்ளி ஆசிரியர்கள் நிலை?அரசு பள்ளி ஆசிரியா்களை விட தனியார் பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகம்,வரும் தேர்தலில் பிரதிபலிக்கட்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி