SCA உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத பொறியியல் இடங்களுக்கு விருப்பமுள்ள SC மாணவர்கள் 24.11.2020 முதல் நடைபெறும் இணையதள கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் - TNEA செயலாளர்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2020

SCA உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத பொறியியல் இடங்களுக்கு விருப்பமுள்ள SC மாணவர்கள் 24.11.2020 முதல் நடைபெறும் இணையதள கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் - TNEA செயலாளர்...

 


தமிழ்நாடு அரசு ஆணை ( Ms ) எண் .61 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ( TD2 ) துறை நாள் 29.05.2009 யின் படி அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களை நிரப்ப , தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2020 - ல் ஒதுக்கீடு ஆணை பெற்றுள்ள ஆதிதிராவிடர் ( SC ) மாணவர்களுக்கான இணையதளம் வாயிலான கலந்தாய்வு விண்ணப்ப விளம்பர அறிவிக்கை 22.11.2020 அன்று வெளியிடப்பட உள்ளது . 22.11.2020 அன்று வெளியிடப்பட உள்ள அறிவிக்கையினைத் தொடர்ந்து , தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2020 - க்கு விண்ணப்பித்த தமிழ்நாட்டைச் சார்ந்த ( SC ) விண்ணப்பதாரர்களுக்கான கலந்தாய்வு 24.11.2020 முதல் 27.11.2020 இணையதள வாயிலாக நடைபெறவுள்ளது. 


ஏற்கெனவே ஒதுக்கீட்டு ஆணை பெற்ற விருப்பமுடைய ( SC ) விண்ணப்பதாரர்கள் SCA- ல் நிரப்பப்படாமல் உள்ள காலி சேர்க்கை இடங்களை பெற இணையதள கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் . SCA - பிரிவில் காலியாக உள்ள இடங்களை அறியவும் மற்ற விபரங்களுக்கும் கீழ்க்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும். https://www.tneaonline.org or https://www.tndte.gov.in மேலும் விவரங்களை அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 044-2235 1014 | 1015 1 0520 / 0523 | 0527

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி