பள்ளி மானியத் தொகையினை பள்ளி மேலாண்மை குழு வழியாக ( SMC ) செலவிடுவதற்கான நெறிமுறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2020

பள்ளி மானியத் தொகையினை பள்ளி மேலாண்மை குழு வழியாக ( SMC ) செலவிடுவதற்கான நெறிமுறைகள்!2020-2021 ஆம் கல்வியாண்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளி மானியத் தொகையை அட்டவணையில் தெரிவித்தபடி  மாவட்டங்களுக்கு விடுவித்தல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.


SMC Fund Proceedings - Download here...


பள்ளி மேலாண்மை குழு வழியாக ( SMC ) செலவிடுவதற்கான நெறிமுறைகள் :


 * பள்ளி மானியம் பெறப்பட்டவுடன் ஒருங்கிணைந்த பள்ளி மானியப் பதிவேட்டில் ( வ.எண் . பெற்ற தொகை , வங்கி பெயர் மற்றும் நாள் ) ஆகியவற்றை தலைமையாசிரியர் பதிவு செய்தல் வேண்டும் . மேற்கூறிய இனங்களில் தேவையான பொருட்களை வாங்குவதற்கு அவசியமான பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அப்பொருட்களை பட்டியலிட வேண்டும் . 


பட்டியலிடப்பட்ட பொருட்கள் பள்ளி மேலாண்மைக் குழுவின் தீர்மானத்தின்படி தரமான பொருட்களாக மட்டுமே வாங்கப்பட வேண்டும் . 


ஒரு செலவினம் ரூ .25,000 / -க்கு மேல் மிகுந்தால் சமக்ர சிக்ஷா நிதி மேலாண்மை மற்றும் கொள்முதல் கையேடு 2018 ( Financial Management and Procurement Manual ) அறிவுரையின்படி கொள்முதல் விதிகளைப் பின்பற்றி பள்ளி மேலாண்மைக் குழு அளவிலேயே கொள்முதல் செய்யப்பட வேண்டும் . 


General Financial Rules ( GFR ) 145,146 படி உரிய சான்றிதழில் தலைமையாசிரியர் / கொள்முதல் குழுவினர் கையொப்பமிட்டு Procurement file- ல் இணைக்க வேண்டும் . கோவிட் 19 சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான கிருமிநாசினியை நுகர்பொருள் ( Consumable ) பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் . 


31.12.2020 ( டிசம்பர் 2020 ) க்குள் பள்ளிகளுக்கு தேவையான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டிருக்க வேண்டும் . பள்ளி திறந்தவுடன் 15 நாள்களுக்கு மிகாமல் கட்டிட பழுதுப்பார்க்கும் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் . 


* நிதி ஆண்டு இறுதியில் ரொக்கக் கணக்குப் புத்தகம் இறுதி இருப்பு ஆகியவை கணக்காளரால் சரிபார்க்கப்பட்டு தலைமையாசிரியர் கையொப்பமிட வேண்டும் . 


 பள்ளி மானியத்தில் வாங்கப்பட்ட பொருள்களின் செலவு விவரத்தினை EMIS ல் பதிவு செய்ய வேண்டும் . ஒவ்வொரு மாதமும் பள்ளி மேலாண்மைக்குழு கணக்கர் பள்ளி பார்வையின் போது அப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளி மானியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ரொக்கப் பதிவேட்டில் பதிவு செய்வதற்கு எதுவாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் வங்கி கணக்கு புத்தகம் , ரொக்க பதிவேடு மற்றும் செலவு மேற்கொண்டதற்கான பற்று சீட்டுகளை பள்ளி மேலாண்மைக்குழு கணக்கரிடம் ஒத்திசைவு செய்ய வேண்டும் . 


* பள்ளி மானியத் தொகை ( School Grant ) முறையாக செலவிடப்பட்டுள்ளதை உறுதி செய்து பயன்பாட்டுச் சான்றிதழ் ( Utilization Certificate - படிவம் -4 ) மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு 31.03.2021 - க்குள் அனுப்பி வைத்தல் வேண்டும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி