TN - EMIS கைபேசி செயலி வாயிலாக கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2020

TN - EMIS கைபேசி செயலி வாயிலாக கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.

மத்திய அரசின் கடிதங்கள் மற்றும் 21.10.2020 அன்று நடைபெற்ற Project Approval Board ( PAB ) கூட்ட முடிவுகளின் படி , தமிழகத்தில் , 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு , 15 வயதுக்குமேற்பட்ட முற்றிலும் எழுதவும் , படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு , அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் , தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் , பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் கற்போம் எழுதுவோம் இயக்கம் என்கிற புதிய வயது வந்தோர் கல்வித் திட்டத்தை , மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்கிற நிதிப்பங்களிப்பின் கீழ் , அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.


இதன்தொடர்ச்சியாக , கற்போர்கள் ( Learners ) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் ( Volunteer Teachers ) ஆகியோரைக் கண்டறியும் பணிகள் மற்றும் மையங்களை அடையாளம் காணும் பணிகள் அனைத்து மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை சார்ந்த எண்ணிக்கை விவரங்கள் அனைத்தும் Google Spread Sheet வாயிலாக இவ்வியக்ககத்தினால் பெறப்பட்டுள்ளன. மாநில திட்ட இயக்குநர் மற்றும் உறுப்பினர் செயலர் , தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையம் அவர்களின் வழிகாட்டுதல்களின் படி , தற்போது , அனைத்து மாவட்டங்களிலும் பெறப்பட்ட கற்போர்கள் ( Learners ) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் ( Volunteer Teachers ) ஆகியோரின் பெயர் , வயது , ஆதார் எண் உள்ளிட்ட இதர விவரங்களை TN - EMIS கைபேசி செயலி வாயிலாக கீழ்கண்டுள்ளவாறு பெற திட்டமிடப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி