TNPSC - செய்தி வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2020

TNPSC - செய்தி வெளியீடு.


 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு செய்தி வெளியீட்டு எண் : 42 | 2020 

நாள் 04.11.2020 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கான பல்வேறு புதிய தகவல்கள் மற்றும் வசதிகளுடன் புதிய இணையதளம் . தேர்வாணையத் தலைவர் திரு . கா . பாலச்சந்திரன் , இ.ஆ.ப ( ஓய்வு ) அவர்களால் இன்று துவக்கிவைக்கப்பட்டது . 

இதற்கு முன்னர் 2012 லிருந்து 4.8 கோடிக்கும் மேற்பட்ட நபர்களால் பார்வையிடப்பட்ட www.tnpsc.gov.in என்ற இணைய முகவரியில் இயங்கி வந்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் , எட்டு வருட காலத்திற்குப் பிறகு தற்போது புதுப்பொலிவுடன் மாற்றி வடிவமைக்கப்பட்டு , 

அதே www.tnpsc.gov.in முகவரியில் கீழ்கண்ட சிறப்பம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது . சிறப்பம்சங்கள் : தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் அனைத்து தகவல்கள் மத்திய அரசால் வகுக்கப்பட்டுள்ள இந்திய அரசு இணையத்தளங்களுக்கான நெறிமுறைகளை ( Guidelines for Indian Government Websites ) பின்பற்றி இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது • விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான எந்த ஒரு தேர்வு குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் தேர்வு தகவல் பலகை ( EXAM DASHBOARD ) என்ற பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது . 

பார்வை குறைபாடு ( Colour Blindness , Low Vision and Visually Impaired ) உள்ளவர்களும் தமக்கு தேவையான விவரங்களை தாங்களே எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது . 

இந்த இணையதளம் மூலமாக விண்ணப்பதாரர்கள் பின்னூட்டம்  (FEEDBACK ) அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது . 

செயலாளர்

1 comment:

  1. https://youtu.be/5AJZhKELFGs
    2019 ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேதியியல் பணி நியமனம் எப்போது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி