TNTET : காலாவதியாகும் நிலையில் 'டெட்' தேர்வு சான்றிதழ்: பீதியில் பட்டதாரிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2020

TNTET : காலாவதியாகும் நிலையில் 'டெட்' தேர்வு சான்றிதழ்: பீதியில் பட்டதாரிகள்

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கென 2013ல் 'டெட்' தகுதித் தேர்வு எழுதியவர்கள் பணியில் சேர்வதற்கான காலக்கெடு இந்த ஆண்டோடு முடிவடைகிறது. இந்நிலையில், அந்தத் தகுதிச் சான்றிதழை வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கதாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலின் (NCTE) 50வது பொதுக்குழு சமீபத்தில் கூட்டப்பட்டது. இதில், ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி முன்பு, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால், அந்தச் சான்றிதழை வைத்து 7 ஆண்டுகள் வரை பணிவாய்ப்பு பெறலாம் என்ற விதிமுறை இருந்தது. தற்போது, இச்சான்றிதழை வாழ்நாள் முழுக்க, பணி வாய்ப்புக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலின் துணைச் செயலாளர் அனில்குமார் ஷர்மா வெளியிட்டார். இதை பின்பற்றி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும் (TTEU) அக்டோபர் 21ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. மத்திய அரசின் சுற்றறிக்கையை மேற்கோள்காட்டி, மாணவர்களை டெட் தேர்வு எழுத ஊக்கப்படுத்தும்படி அதில் கூறப்பட்டிருந்தது.


ஆனால், இனிமேல் டெட் தேர்வு எழுதுவோர் மட்டுமே இச்சலுகை பெற முடியும் என விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருப்பதுதான் பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கடந்த ஆண்டுகளில் டெட் தேர்வு எழுதி வேலைக்காகக் காத்திருக்கும், லட்சக்கணக்கான பட்டதாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.


டெட் தேர்வும் பின்னணியும்


கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டம் (RTE) 2009ன் படி, தொடக்க, நடுநிலை வகுப்புகளுக்கு கற்பித்தல் பணிகளில் ஈடுபடுவோரின் தகுதியை நிர்ணயிக்க, ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும் என, கடந்த 2010 ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இத்தேர்வில் வெற்றி பெற்றால், வழங்கப்படும் தகுதி சான்றிதழ், ஏழு ஆண்டுகள் செல்லத்தக்கதாகும். இக்காலக்கெடுவுக்கு பணி வாய்ப்பு பெறாதவர்கள் மீண்டும், டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது.


இந்த டெட் தேர்வை முதலில் எதிர்த்த தமிழக அரசு பின்பு, 2011, நவம்பர் 15ஆம் தேதி ஏற்றுக் கொண்டு அதற்கான அரசாணையை வெளியிட்டது. இதன்படி, 2012ல் முதல் டெட் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடக்கும் இத்தேர்வில், 90 மதிப்பெண்கள் பெறுவோர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, காலியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால், 2013க்கு பிறகு, வெயிட்டேஜ் முறை அமல்படுத்தப்பட்டது.


இதில், டெட் தேர்வு மதிப்பெண்கள் 60 சதவீதமாகவும், பள்ளி, கல்லுாரிகளில் பெற்ற மதிப்பெண்கள் 40 சதவீதம் என்ற அடிப்படையிலும் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதோடு, டெட் தேர்வில் தேர்ச்சிக்கான 90 மதிப்பெண்களில், 5 சதவீத தளர்வு வழங்கப்பட்டது.


அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பாட திட்டம் தாமதமானதாக குற்றச்சாட்டு - உண்மை என்ன?நீட் தேர்வில் சாதித்த ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளியின் மகன் – சாத்தியமானது எப்படி?


ஆனால் இந்த முறையில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. இதையடுத்து 2018 ஜூலை மாதம் முதல் வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட்டது. இதற்கு பதிலாக, அரசுப்பணியில் சேர, டெட் தேர்வுடன், மீண்டும் ஒரு போட்டித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்ற புதிய முறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற குழப்பங்களால், ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட டெட் தேர்வு, தற்போது வரை 2013, 2017, 2019ல் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது. இதில், 2013ல் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்ற 94 ஆயிரம் பேரில், 14 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 80 ஆயிரம் பேர், ஏழு ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். டெட்டில் தேர்ச்சி பெற்று ஏழாண்டுகள் முடியப்போவதால் இவர்களின் தகுதிச் சான்றிதழ் காலவதியாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.


இதற்குப் பிறகு வைக்கப்பட்ட தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கும் பணிவாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, டெட் தேர்வு அறிவித்தது முதல், தேர்வெழுதிய அனைவருக்கும், தகுதிச் சான்றிதழ் கால அளவை, வாழ்நாள் முழுக்க நீட்டிக்க வேண்டுமென்ற கோரிக்கையை டெட் தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி கிடைக்காதவர்கள் எழுப்புகிறார்கள்.


பட மூலாதாரம்,GETTY IMAGES


தமிழ்நாடு அரசு சில காலம் கடைப்பிடித்த 'வெயிட்டேஜ்' முறையால் பாதிக்கப்பட்ட பலர் தங்களுக்கு நிவாரணம் வேண்டுமென்கிறார்கள். கிருஷ்ணகிரியை சேர்ந்த சக்திவேல் 2013லேயே 150க்கு 93 மதிப்பெண்களைப் பெற்று டெட் தேர்வில் தேர்ச்சிபெற்றுவிட்டார். பிறகு வெயிட்டேஜ் முறை அறிமுகப் படுத்தப்பட்டதையடுத்து, தரவரிசை பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டார்.


"இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரை சென்றும் எனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. பின்பு தமிழக அரசே, கடந்த 2018ல் 'வெயிட்டேஜ்' முறையை ரத்துசெய்தது. இம்முறையை நடுவில் கடைபிடிக்காமல் இருந்திருந்தால், பலர் 2013ம் ஆண்டிலேயே அரசுப் பணிக்கு சென்றிருப்போம். புதுச்சேரி, கேரளாவில், டெட் மதிப்பெண்களுடன் வேலைவாய்ப்பு பதிவு மூப்பையும் சேர்த்து பணிவாய்ப்பு வழங்கப்படுகிறது. தமிழக அரசும் இம்முறையை பின்பற்றலாம். இதோடு, டெட் தேர்வு துவங்கியது முதல் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும், தகுதிக் காலத்தை வாழ்நாள் முழுக்க நீட்டிக்க வேண்டும்'' என்கிறார்.


தான் நடத்தும் தகுதித் தேர்வை நம்பாமல் மீண்டும் ஒரு தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்துவது குறித்தும் பலர் கேள்வி எழுப்புகிறார்கள். "தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் தேர்வுகளின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கலாம். ஆனால், அரசே நடத்திய டெட் தேர்வில் வெற்றிபெற்றாலும், மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருப்பதை ஏற்க முடியாது. முறையாக காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளிட்டு மூப்பு அடிப்படையில், டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் நடப்பாண்டில் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஆசிரியர் - மாணவர் விகிதத்தைக் கணக்கிட்டு, காலியிடங்களை நிரப்ப வேண்டும்" என்கிறார் கல்வியாளர் சங்கமம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சதீஷ்குமார்.


தமிழ்நாடு அரசின் ஆசிரியர் பணியில் சேர, பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 40 வயதும் பிற பிரிவினருக்கு 45 வயதும் நிர்ணயித்து சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 20 சதவீதம் பேருக்கு, இந்த வயது வரம்பு தாண்டிவிட்டது. மேலும், ஆறு ஆண்டுகளாக புதிய நியமனங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இந்தப் பின்னணியில்தான் டெட் தேர்ச்சி சான்றிதழை வாழ்நாள் தகுதியுள்ளதாக்க வேண்டுமென எழுந்திருக்கிறது..


50 comments:

  1. Idhu eppa ulla news,TET eligible candidate ku certificate validity innum life long agaliya,

    ReplyDelete
  2. நடப்பில் காலாவதியாகத 2012&14&17&2019 அனைவரது சான்றிதழும் ஆயூட்காலமாக்கப்படும்.
    சிறிதும் எவரும் ஐயம் கொள்ள தேவையில்லை.

    ம.இளங்கோவன்
    மாநில ஒருங்கிணைப்பாளர்
    2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக முடியாது முடிந்த அளவிற்க்கு வசூல் வேட்டை நடத்திக்கொள்ளவும்

      Delete
    2. இது என்ன வருத்தப்படாத வாலிபர் சங்கமா 13

      Delete
    3. இத பத்தி மட்டும் சொல்றீங்க ஆனால் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இனிய ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாது இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கு உரிய போராட்டத்தை கையில் எடுக்க வேண்டுகிறேன்

      Delete
    4. இத பத்தி மட்டும் சொல்றீங்க ஆனால் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இனிய ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாது இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கு உரிய போராட்டத்தை கையில் எடுக்க வேண்டுகிறேன்

      Delete
    5. இத பத்தி மட்டும் சொல்றீங்க ஆனால் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இனிய ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாது இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கு உரிய போராட்டத்தை கையில் எடுக்க வேண்டுகிறேன்

      Delete
    6. எருமை மாடு மேய்க்கும் எல்லாம் கல்வி அமைச்சர் ஆகிறான் ஆனால் கஷ்டப்பட்டு படிச்சா நாம் இன்னும் மாடுமேய்க்கும் படி வச்சுட்டாங்க

      Delete
  3. இதுவரை 2012,2013,2017,2019 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு டெட் சான்றிதழ் ஆயுட்காலம் ஆயுட்காலமாக மாற்றி மத்திய அரசோ, NCTE யோ, மற்றும் தமிழக அரசோ அதிகாரபூர்வமான அறிவிப்பு, அரசானை வெளியிடப்படவில்லை.இனிவரும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே NCTE டெட் சான்றிதழ் ஆயுட்காலம் ஆயுட்காலமாக மாற்றி அறிவித்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. இதற்கிடையில், ஈரோடு மாவட்டம், பவானியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை, ஆசிரியர் தகுதி தேர்வில் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற அனைவரும், வாழ்நாள் முழுதும் ஆசிரியர் பணி பெற தகுதி உடையவர்களாக, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கும்பகோணம் பள்ளி

      Delete
    2. Yes..ithu 2 days ku munnadi senkottaitan sir erode la pesunathu.. Yerkanavae pass panavanga don't feel.

      Delete
    3. Official ah G.O varama edhum conform ila. G. O vandha dhan conform

      Delete
  4. இதுவரை 2012,2013,2017,2019 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு டெட் சான்றிதழ் ஆயுட்காலம் ஆயுட்காலமாக மாற்றி மத்திய அரசோ, NCTE யோ, மற்றும் தமிழக அரசோ அதிகாரபூர்வமான அறிவிப்பு, அரசானை வெளியிடப்படவில்லை.இனிவரும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே NCTE டெட் சான்றிதழ் ஆயுட்காலம் ஆயுட்காலமாக மாற்றி அறிவித்துள்ளது.

    ReplyDelete
  5. இதுவரை 2012,2013,2017,2019 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டெட் சான்றிதழ் ஆயுட்காலம் ஆயுட்காலமாக மாற்றி மத்திய அரசோ, NCTE யோ, மற்றும் தமிழக அரசோ அதிகாரபூர்வமான அறிவிப்பு, அரசானை வெளியிடப்படவில்லை.இனிவரும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே NCTE டெட் சான்றிதழ் ஆயுட்காலம் ஆயுட்காலமாக மாற்றி அறிவித்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Hello Mr. Sakthi sakthivel ungaluku news sariya kavanika theriyatha. Yerkanavae pass pannavangalukum life time validity than. Poi nalla news padichutu vanthu comment padunga🤦‍♂️🤦‍♂️

      Delete
    2. ஏற்கனவே pass பன்னவங்களுக்கு இன்னும் ஆயுட்காலமாக செல்லும் என்று சொல்லவில்லை.சட்ட ஆலோசனை செய்து அவர்களுக்குக்கும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தான் NCTE கூறியது

      Delete
  6. 2019 ல் TET Exam நடக்கவே இல்லை. தவறான செய்திகளை பரப்பாதீர்கள்

    ReplyDelete
    Replies
    1. கத்துக்குட்டி... கத்துக்கிட்டு அப்பறம் command போடு...

      Delete
    2. Mr Kumar 2019 TET Exam நடந்தது உண்மை,paper ஒன்று 551பேர் pass,paper இரண்டு 316 பேர் pass.தேர்ச்சி சதவீதம் 0.16 %

      Delete
  7. Notification No. 8 /2019
    Date: 28.02.2019
    GOVERNMENT OF TAMIL NADU
    TEACHERS RECRUITMENT BOARD
    4
    th Floor, EVK Sampath Maaligai, DPI Campus, College Road,
    Chennai – 600 006.
    Website: http://www.trb.tn.nic.in
    TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019
    NOTIFICATION
    Applications are invited only through online mode for Teacher
    Eligibility Test, Paper I and Paper II for the year 2019 from the eligible
    candidates in Tamil Nadu.
    In accordance with the provisions of sub-section (1) of section 23 of the
    Right of Children to Free and Compulsory Education Act, 2009 (RTE Act), the
    National Council for Teacher Education (NCTE) has vide Notifications dated
    23rd August 2010, 29th July 2011 and 28th June 2018 laid down the minimum
    qualifications for a person to be eligible for appointment as a teacher in
    classes I to VIII. It had been inter alia provided that one of the essential
    qualifications for a person to be eligible for appointment as a teacher in any of
    the schools referred to in clause (n) of section 2 of the RTE Act is that he /
    she should pass the Teacher Eligibility Test (TET) which will be conducted by
    the appropriate Government in accordance with the guidelines framed by the
    NCTE.
    Teachers Recruitment Board has been designated as the Nodal Agency
    for conducting Teacher Eligibility Test as per G.O.Ms.No.181, School Education
    (C2) Department, dated: 15.11.2011.

    ReplyDelete
  8. Notification No. 8 /2019
    Date: 28.02.2019
    GOVERNMENT OF TAMIL NADU
    TEACHERS RECRUITMENT BOARD
    4
    th Floor, EVK Sampath Maaligai, DPI Campus, College Road,
    Chennai – 600 006.
    Website: http://www.trb.tn.nic.in
    TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019
    NOTIFICATION
    Applications are invited only through online mode for Teacher
    Eligibility Test, Paper I and Paper II for the year 2019 from the eligible
    candidates in Tamil Nadu.
    In accordance with the provisions of sub-section (1) of section 23 of the
    Right of Children to Free and Compulsory Education Act, 2009 (RTE Act), the
    National Council for Teacher Education (NCTE) has vide Notifications dated
    23rd August 2010, 29th July 2011 and 28th June 2018 laid down the minimum
    qualifications for a person to be eligible for appointment as a teacher in
    classes I to VIII. It had been inter alia provided that one of the essential
    qualifications for a person to be eligible for appointment as a teacher in any of
    the schools referred to in clause (n) of section 2 of the RTE Act is that he /
    she should pass the Teacher Eligibility Test (TET) which will be conducted by
    the appropriate Government in accordance with the guidelines framed by the
    NCTE.
    Teachers Recruitment Board has been designated as the Nodal Agency
    for conducting Teacher Eligibility Test as per G.O.Ms.No.181, School Education
    (C2) Department, dated: 15.11.2011.

    ReplyDelete
  9. Semma 2019 June 8 ,9 exam nadanthadu

    ReplyDelete
  10. இனி வரும் காலங்களில் TET பாஸ் செய்தால் தான் life time validity... இதற்கு முன்பு பாஸ் செய்தவர்கள் பற்றி ஏதும் சொல்லவில்லை... சக்திவேல் சொல்வது சரி தான்..

    ReplyDelete
    Replies
    1. கும்பகோணத்தில் தெளிவாக சொன்னார் கல்விஅமைச்சர்
      தகுதித்தேர்வு தேர்ச்சி அடைந்தவர்கள் ஆயுட்கால சான்றிதழ் ஆக மாறிவிட்டது

      Delete
  11. நலச்சங்கம்னு வைத்துக்கொண்டு திருட்டு கூட்டம் நாம கதையை முடிச்சுட்டானுவோ முதல்வர் அவர்கள் 2013 தேர்ச்சிப்பெற்வர்களுக்கு எந்த விதத்திலும் கருனைக்காட்ட கூடாது என்று அதிரடி உத்தரவு

    ReplyDelete
  12. 2013 பட்ட நாமம் போட்டாச்சு இந்த அரசு

    ReplyDelete
  13. அமைச்சர் அவர்கள் வாய் வழியாக கூறுவது ஏற்க மாட்டார்கள்.ஏற்கனவே தேர்ச்சி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் சான்றிதழாக மற்றபட்டதற்கான அரசாணையை வெளியிட வேண்டும்.வாய்மொழி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.அதே போன்று வயது வரம்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இல்லை என்று வாய் மொழியாக தான் கூறுகிறார்.இதற்கும் அரசாணை வெளியிட வேண்டும்.தேர்தலுக்காக எதையும் வாய்மொழியாக கூறுவதை விட அரசாணை வெளியிட்டு செயல்படுத்துவது தான் சரியானது. இதனை அமைச்சர் அவர்கள் செயல்படுத்த வேண்டும்.ஆசிரியர் தகுதி தேர்வில் weightageஆல் பாதிக்கப்பட்டவர்களின் வலியை தயவு செய்து உணர்ந்து எங்களுக்கு பணி நியமனம் வழங்க வழி செய்யவும்.

    ReplyDelete
  14. Kumar neenga tamilnadula than irundheengala. 2019 tet nadandhadhu. Adhula paper 2 la 316 peru than pass. Adhula nanum oruvan. Ippadi irukkeengalae.

    ReplyDelete
  15. அமைச்சர் அவர்கள் வாய் வழியாக கூறுவது ஏற்க மாட்டார்கள்.ஏற்கனவே தேர்ச்சி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் சான்றிதழாக மற்றபட்டதற்கான அரசாணையை வெளியிட வேண்டும்.வாய்மொழி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.அதே போன்று வயது வரம்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இல்லை என்று வாய் மொழியாக தான் கூறுகிறார்.இதற்கும் அரசாணை வெளியிட வேண்டும்.தேர்தலுக்காக எதையும் வாய்மொழியாக கூறுவதை விட அரசாணை வெளியிட்டு செயல்படுத்துவது தான் சரியானது. இதனை அமைச்சர் அவர்கள் செயல்படுத்த வேண்டும்.ஆசிரியர் தகுதி தேர்வில் weightageஆல் பாதிக்கப்பட்டவர்களின் வலியை தயவு செய்து உணர்ந்து எங்களுக்கு பணி நியமனம் வழங்க வழி செய்யவும்.

    ReplyDelete
  16. மறுபடியும் முதல்லேர்ந்தா😞

    ReplyDelete
  17. ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்றபிறகு பணிநியமன செய்ய நியமன தேர்வு (Competitive exam) வேண்டாம் என்று சொல்பவர்கள் அனைவருமே தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் அரசு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்கிறீர்கள் அல்லது தொகுப்பு ஊதியத்தில் பணிநியமன வழங்க வேண்டும் என்கிறார்கள் நல்ல விஷயம். ஆனால் அரசு வைத்து உள்ள நியமன தேர்வு வேண்டாம் என்றால் அடுத்த எந்த அடிப்படையில் பணிநியமன வழங்க வேண்டும் என்று ஏன் வலியுறுத்தவில்லை.. (ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண்கள் + பதிவு மூப்பு ) முறையை அரசு பின்பற்ற வேண்டும் என்றோ அல்லது வேற எதாவது முறை இருந்தால் அதையும் தெறிவிக்கலாமே..

    ReplyDelete
  18. அரசு பணி என்பது ஆற்றில் போகும் தண்ணீர் அல்ல.. அளளாளுக்கு அவருக்கு ஏற்றாற்போல் எடுத்துக்கொள்ள.. அரசானையின் அடிப்படையில்தான் அனைத்துமே நடக்கும்..நியமன தேர்வு வேண்டாம் என்றால் அடுத்த முறையை தெறியப்படுத வேண்டும் அரசுக்கு கோரிக்கை வைத்து வலியுறுத்த வேண்டும் அல்லவா

    ReplyDelete
  19. ஏற்கனவே தேர்வு பெற்றவர்களுக்கு ஆயுள் காலமாக மாற்றுவது கடினம் எந்த GO போட்டாலும் அடுத்து வர இருப்பர்வர்களுக்கே பொருந்தும். மத்திய அரசு அதாவது NCTE மாற்றி அமைத்தால் உண்டு இதில் மாநில அரசு எதுவும் பண்ண முடியாது. யாரையும் சுயநலமாய் போராடுபவர்களை நம்பி ஏமாறாதீர் தலை கீழாய் நடந்தாலும் 2013கு முன்னிருமை குடுக்க முடியாது 2017இல் பணி ஆணை வழங்க வேண்டிய நிலையில் குழப்பத்தை உண்டாகியவர்கள் 3வருடம் வீணாகி விட்டது அமைச்சர் மேலயே போலீஸ் கம்பளைண்ட் செய்தால் நீ செத்தாலும் வேலை போட மாட்டாங்க சுயநலமாக போராடுபவர் பின்னாடி போகாதீர்

    ReplyDelete
  20. ஏற்கனவே தேர்வு பெற்றவர்களுக்கு ஆயுள் காலமாக மாற்றுவது கடினம் எந்த GO போட்டாலும் அடுத்து வர இருப்பர்வர்களுக்கே பொருந்தும். மத்திய அரசு அதாவது NCTE மாற்றி அமைத்தால் உண்டு இதில் மாநில அரசு எதுவும் பண்ண முடியாது. யாரையும் சுயநலமாய் போராடுபவர்களை நம்பி ஏமாறாதீர் தலை கீழாய் நடந்தாலும் 2013கு முன்னிருமை குடுக்க முடியாது 2017இல் பணி ஆணை வழங்க வேண்டிய நிலையில் குழப்பத்தை உண்டாகியவர்கள் 3வருடம் வீணாகி விட்டது அமைச்சர் மேலயே போலீஸ் கம்பளைண்ட் செய்தால் நீ செத்தாலும் வேலை போட மாட்டாங்க சுயநலமாக போராடுபவர் பின்னாடி போகாதீர்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக NCTE இதற்கு நல்ல தீர்வை தரும்.நல்லதே நடக்கும்.

      Delete
    2. கண்டிப்பாக NCTE இதற்கு நல்ல தீர்வை தரும்.நல்லதே நடக்கும்.

      Delete
    3. கண்டிப்பாக NCTE இதற்கு நல்ல தீர்வை தரும்.நல்லதே நடக்கும்.

      Delete
  21. Part time teachers ku help panuga

    ReplyDelete
  22. நல்லது நடக்கும்

    ReplyDelete
  23. கல்வி செய்தி தளத்தில் வரும் unknown நபர்களை நீக்க வேண்டுகிறேன். பெயர் சொல்லாத நபர்கள் கருத்து தேவையா? கல்வி செய்தி கவனிக்குமா?.

    ReplyDelete
  24. NCTE thaan solli ullathu ..eni varum kalangalil TET pass seithaal thaan lifetime validity... already pass pannunavangalukku porunthaathu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி