பிளஸ் 1, பிளஸ் 2 துணை பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு மறு மதிப்பீடு முடிவுகள் வெளியிடப்படும் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2020

பிளஸ் 1, பிளஸ் 2 துணை பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு மறு மதிப்பீடு முடிவுகள் வெளியிடப்படும் அறிவிப்பு.

 

பிளஸ் 1, பிளஸ் 2 துணை பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு, 15ம் தேதி மறு மதிப்பீடு முடிவுகள் வெளியாகின்றன. 



அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திகுறிப்பு:பிளஸ் 1, பிளஸ் 2 துணை பொதுத்தேர்வை, செப்டம்பர் மற்றும் அக்டோபரில் எழுதிய மாணவர்களுக்கு, மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கான முடிவுகள், வரும், 15ம் தேதி வெளியாகின்றன.விண்ணப்பித்த தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், 15ம் தேதி பிற்பகல், 2:00 மணி முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பெயர் மட்டும், பட்டியலில் இடம் பெறும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மட்டுமே கொரனா நோய் காரணமாக தேர்ச்சி என அறிவத்தது ஆனால் தனித்தேர்வு மாணவர்களை உரிய காலகட்டத்தில் தேர்வு வைக்காமல் மார்ச்,ஜீன் ,என கூறிவிட்டு கடைசியில் செப்டம்பர் மாதம் அதாவது மாணவர்கள் படிக்கும் ஆர்வம் குறைந்து நமக்கும் தேர்ச்சி என அறிவிப்பு வரும் என நினைத்து இருந்து விட்டனர் ஆனால் 20நாட்கள்களில் தேர்வு கால அட்டவணை வந்தது தொடர்ச்சியாக படிக்க இடைவெளி இல்லாமல் அது போக தேர்வு மையத்தில் பள்ளி மாணவர்கள் போல தனித்தேர்வு மாணவர்களையும் தேர்ச்சி என அறிவிக்கபடும் என சில தேர்வு அறை கண்காணிப்பாளர் கூறியுள்ளனர்.இந்த குறைபாடால் தனித்தேர்வு மாணவர்கள் நம்பி படிக்கும் ஆர்வம் குறைந்து அதிகமாக மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.எனவே வரும் கல்வி ஆண்டில்.தேர்வும் தேர்ச்சியும் அனைத்து மாணவர்களுக்கும் சமம் என செயல்படுத்த வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி