10 ஆண்டுகளாக நிரந்தர தீர்வுக்கான அரசாணையை எதிர்பார்த்துக் காத்துள்ள TET நிபந்தனை ஆசிரியர்கள்- தமிழக அரசின் கருணைக்கண் படுமா..? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2020

10 ஆண்டுகளாக நிரந்தர தீர்வுக்கான அரசாணையை எதிர்பார்த்துக் காத்துள்ள TET நிபந்தனை ஆசிரியர்கள்- தமிழக அரசின் கருணைக்கண் படுமா..?


TET LATEST NEWS

தமிழகத்தில் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணியாற்றிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனை ஆசிரியர்களுக்கு கடந்த பத்து ஆண்டுகள் பணிப் பாதுகாப்பு மட்டும் கொடுத்துவரும் தமிழக அரசு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மட்டும் இதுநாள்வரை நிரந்தர தீர்வு காண  தாமதம் காட்டுவது மிகுந்த வேதனை தருகிறது என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகின்றனர்.


கட்டாயக்கல்விச் சட்டம் (RTE Act)மத்திய அரசு அமலாக்கம் செய்த தேதி 23/08/2010. ஆனால் அதை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு அமலாக்கம் செய்த தேதிக்கும் உள்ள வித்தியாசங்கள் ஒருபுறம் இருப்பினும் ஆசிரியர் பணி நியமனங்கள் தொடர்பாக முறையான அறிவிப்புகள்/ செயல்முறைகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அற்ற பள்ளிகள் போன்ற அனைத்திற்கும் சற்றே புரிதலானது அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், இல்லாமல் போனதால் அந்த காலகட்டத்தில் பல்வேறு ஆசிரியர்கள் பணி நியமனங்கள் பெற்றனர்.

TET கட்டாயம் என்ற நிபந்தனைகள் பணி நியமனம் பெற்ற பின்னர் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு, முன்தேதியிட்டே தெரிவிக்கப்பட்டது.

பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களில்,
அரசு பள்ளிகள் மற்றும் சிறுபான்மை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, TET கட்டாயம் இல்லை என்ற   உத்தரவு நீதிமன்றம் வாயிலாகவும், அரசு உத்தரவு அடிப்படையிலும் அரசு செயல்முறைகள் வெளியீடு செய்யப்பட்டன.

ஆனால், அரசு உதவிபெறும் சிறுபான்மை அற்ற பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனங்கள் *16/11/2012* ஆம் நாளிட்ட பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகளின் அடிப்படையில்  இனிமேல் பணி நியமனங்கள் மேற்கொள்ளும்போது TET தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே  தேர்வு செய்ய வேண்டும் என்ற அறிவுரை அனைத்து AIDED பள்ளி செயலர்களுக்கும் வழங்கி உத்தரவு வந்தது.

இதன் உள்ளார்ந்த நிலை யாதெனில், *23/08/2010 முதல் 16/11/2012* க்கு இடையிலான காலகட்டத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் என்ற நிபந்தனைகள் பற்றிய புரிதல் இல்லாமல், பள்ளி செயலாளர்கள், DEO,CEO, மற்றும் உயர் அதிகாரிகள் மூலமாக பணி நியமனங்கள் ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன.

ஆங்காங்கே இதுதொடர்பான வழக்குகளும் பதிவாகின. 

அதன் தொடர்ச்சியாக நீதிமன்றங்களின் அறிவுறுத்தல் அடிப்படையிலும் தமிழக அரசின் கருணைப் பார்வையினாலும், இன்றுவரை இந்த TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு மட்டும் அளிக்கப்பட்டு வருகிறது. வேறு எந்த சலுகைகளும் இல்லை.
எனினும் இந்த சிக்கலுக்கு நிரந்தரமாக தீர்வு காணவும், வழக்குகள் முடிவுக்கு வரவும் ஒரே வழி என்னவென்றால் கடந்த 10 ஆண்டுகளாக பணியில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு ஒரு புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளித்து அரசு உதவிபெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு TET லிருந்து விலக்கு அளித்தது போல்)* பணிப்பாதுகாப்பிற்கான அரசாணையை கருணையுடன் வெளியிட வேண்டும் என நிபந்தனை ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.

இதுகுறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு கல்வி அமைச்சர் ஆகியோர் விரைவில் முடிவெடுத்து விரைவில் அரசாணை வெளியீடு செய்ய வேண்டும் என்பதை பல்வேறு ஆசிரியர் சங்கங்களும், கல்வியியல் ஆர்வலர்களும், பாதிக்கப்பட்ட குடும்பங்களும் பலமுறை வேண்டுகோள் மனுக்களை கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக கொடுத்து வருகின்றனர்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பாதுகாப்பு தந்துவரும் தற்போதைய தமிழக அரசு நிரந்தரமாக இவர்களது பிரச்னைகளுக்குத்தீர்வு காணும் விதமாக ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து  முழுவதும் விலக்கு என்ற அரசாணையை 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இன்னும் வழங்காதது வேதனை அளிப்பதாக உள்ளது என பாதிக்கப்பட்டுள்ள அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற  பள்ளிகளின் கூட்டமைப்பு ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

1 comment:

  1. 2013 டெட் பாஸ் செய்தவர்களுக்கு எப்ப வேலை குடுப்பார்கள்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி