தேன் என்பதெல்லாம் தேன் அல்ல! பரிசோதனையில் தோற்ற 10 முன்னணி நிறுவனங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2020

தேன் என்பதெல்லாம் தேன் அல்ல! பரிசோதனையில் தோற்ற 10 முன்னணி நிறுவனங்கள்

 


சுத்தமான தேன் என்ற முத்திரையைப் பெற வேண்டும் என்றால், 18 பரிசோதனைகளில் அந்தத் தேன் வென்றாக வேண்டும். ஆனால், இந்தியாவில் விற்பனையில் உள்ள 13-ல் 10 முன்னணி நிறுவனங்கள் இந்த சோதனையில் தோல்வியுற்றுள்ளன.


அது மட்டுமல்ல, இந்த பரிசோதனைகளில் தோல்விகண்ட பல முன்னணி தேன் உற்பத்தி நிறுவனங்கள், தங்களது நிறுவன வளர்ச்சிக்காக சிந்தெடிக் சுகர் எனப்படும் ஒருவித செயற்கை சர்க்கரைப் பாகைச் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.


அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய தேன் பரிசோதனையில், தோல்வி கண்ட தேன் நிறுவனங்களின் தேன் தயாரிப்பு குறித்த விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


நாட்டில் மிகவும் புகழ்பெற்ற தேன் உற்பத்தி நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்பட்ட தேன் மற்றும் கச்சா தேன் ஆகியவற்றை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் சோதனைக்கு எடுத்துக்கொண்டது.


இந்தியாவில் உள்ள பரிசோதனை மையங்களில் நடத்தப்படும் பெரும்பாலான சோதனைகளில் இந்தத் தேன் நிறுவனங்கள் வெற்றி பெற்றாலும், ஒரே ஒரு சோதனையில் - அதன் ஆய்வகம் ஜெர்மனியில்தான் உள்ளது - சோதனைக்கு உள்படுத்தப்பட்ட 13 தேன் நிறுவனங்களில் வெறும் 3 நிறுவனங்கள் மட்டுமே வெற்றி கண்டிருக்கின்றன. 


பொதுவாக இந்தியாவில் சுத்தமான தேன் என்று விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய இந்த பரிசோதனை தேவையில்லை. ஆனால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் நிச்சயம் இந்தப் பரிசோதனையில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



13 comments:

  1. கள்ள சாராயம் போல இவையும் கள்ள தேன் என சொல்லலாமே!!!

    ReplyDelete
  2. கள்ள தேன் விற்கும் நிறுவனங்கள் பெயர்ப்பட்டியல் தரவும்

    ReplyDelete
    Replies
    1. அது மட்டும் தர மாட்டாங்க

      Delete
    2. List is available in many journals and magazines notable of the leading brands are Dabur, pathanjali, apis, and so on... Saffola and two other small brands passed the NMR test in Germany conducted by CSE.

      Delete
  3. Our thagaval thantha urupadiya thangaya... Illa ....

    ReplyDelete
  4. Our thagaval thantha urupadiya thangaya...illa..

    ReplyDelete
  5. Admin! Are you watching comments? கள்ள தேன் விற்கும் நிறுவனங்கள் பெயர்ப்பட்டியல் தரவும்

    ReplyDelete
  6. தேன் என்பதெல்லாம் தேன் அல்ல! பரிசோதனையில் தோற்ற 10 முன்னணி நிறுவனங்கள்::

    இந்தியாவில் உள்ள பரிசோதனை மையங்களில் நடத்தப்படும் பெரும்பாலான சோதனைகளில் இந்தத் தேன் நிறுவனங்கள் வெற்றி பெற்றாலும், ஒரே ஒரு சோதனையில் - அதன் ஆய்வகம் ஜெர்மனியில்தான் உள்ளது - சோதனைக்கு உள்படுத்தப்பட்ட 13 தேன் நிறுவனங்களில் வெறும் 3 நிறுவனங்கள் மட்டுமே வெற்றி கண்டிருக்கின்றன.




    இவ்வளவு தெளிவாக தகவல் தெரிவிக்கும் ஊடக நண்பர்கள் எந்தெந்த தேன் நிறுவனங்கள் சோதனையில் வெற்றி கண்டிருக்கின்றன. எந்தெந்த தேன் நிறுவனங்கள் தர சோதனையில் தோல்வி அடைந்தன என்று தெரிவித்தால் பொது மக்களுக்கு பயனுடையதாக இருக்கும் .......இவ்வாறு வெளிப்படையான தகவல் தெரிவிக்காமல் இருக்க என்ன தடையாக உள்ளது .........

    சிந்தியுங்கள் மக்களே சிந்தியுங்கள்...............

    ReplyDelete
  7. https://www.thehindu.com/news/national/10-out-of-13-honey-brands-fail-purity-test-finds-cse-investigation/article33230094.ece

    ReplyDelete
  8. அந்த 3 கம்பேனி எது

    ReplyDelete
  9. Saffola, Markfed Sohna and Nature’s Nectar are the 3 companies passed in the test.

    ReplyDelete
  10. anth yelarai naatula yelu naadu ethu? antha arai naadu ethu? sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி