முதல், 2ம் ஆண்டு மாணவர்களுக்கு 21 முதல் கல்லுாரிகளில் வகுப்புகள் - kalviseithi

Dec 12, 2020

முதல், 2ம் ஆண்டு மாணவர்களுக்கு 21 முதல் கல்லுாரிகளில் வகுப்புகள்

 


கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, வரும், 21ம் தேதி முதல், நேரடி வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. 


கொரோனா தொற்று பரவியதால், தமிழகம் முழுதும் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. கோடை கால விடுமுறைமுடிந்த பிறகும், கொரோனா தொற்று தீவிரமாக இருந்ததால், புதிய கல்வி ஆண்டில், கல்வி நிறுவனங்களை திறக்காமல், ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்புவதால், கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப் படுகின்றன. 


முதற்கட்டமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், முதுநிலை இறுதியாண்டு மற்றும்ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, டிச., 2ல் நேரடி வகுப்புகள் துவங்கின. இதையடுத்து, அனைத்து வகை படிப்புகளிலும், இளநிலை, முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு, டிச.,7ல் நேரடி வகுப்புகள் துவங்கி உள்ளன. 


அதன் தொடர்ச்சியாக, கல்லுாரிகளில் முதலாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகளை துவக்க, உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, கல்லுாரி கல்வி மண்டல இயக்குனர்கள் மற்றும் கல்லுாரிமுதல்வர்களிடம் உயர் கல்வித் துறை கருத்து கேட்டுள்ளது.


கல்லுாரிகளை திறந்த பின், மாணவர்களின் உடல்நலம் எப்படியுள்ளது; கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன.இதன் அடிப்படையில்,வரும், 21ம் தேதி முதல், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் நேரடியாக வகுப்புகள் துவங்கலாமா என, முதல்வரின் ஒப்புதலை கேட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 comments:

  1. எனது பெயர் அமர்நாத்
    மாணவர்கள் கண்டிப்பாக தங்களது நண்பர்களுடன் தொட்டு உரையாடுவார்கள் மற்றும் தங்களது உணவை பகிர்ந்து பரிமாய்க்கொள்வார்கள். ஏதோ முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள் மட்டும்தான் அவர்கள் தங்களது சுயகட்டுப்பாட்டில் இருப்பர்கள் அதற்கு பிறகு 98சதவீத மாணவர்கள் கண்டிப்பாக கட்டுப்பாட்டை இழந்து அவர்களால் கண்டிப்பாக சமூக இடையை கடைபிடிக்க முடியாது. ஒருவருக்கு corona நோய் இருந்தாலும் பல்லாயிர மாணவர்களுக்கு பரவும் தங்கள் குடும்பத்தினருக்கும் பரவும் தங்கள் அக்கம் பக்கத்திற்கும் பரவும். திரையரங்குகள் மற்றும் இருக்கும் போது இடங்களுக்கு மக்கள் சென்றாலும் அவர்கள் அங்கு செலவழிக்கும் நேரம் மூன்றில் இருந்து 5 மணி நேரம் மட்டுமே அதுவும் நிறையா பேர் இருப்பதில் எனவே எனது கருத்து கல்லூரிகளை திறப்பை ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் அளவு தள்ளி போடலாம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி