தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் 20% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2020

தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் 20% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்.!

 


தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் 20% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். பட்டப்படிப்பு  படித்தவர்கள் நிச்சயம் 10 மற்றும் 12ம் வகுப்புகளிலும், 10ம் வகுப்புப் படித்தவர்கள் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலும் தமிழ்வழிக் கல்வி பயின்றிருந்தால் மட்டுமே-அரசுப்  பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பயன்பெற முடியும் என்று கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு-சட்டப்பேரவையில் ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், சட்டம் நிறைவேற்றப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை வரை ஒப்புதல் அளிக்கவில்லை. 


இதற்கிடையே,  குரூப்-1 தேர்வுகளில் தமிழ்வழி பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், 20% சட்டத் திருத்தத்திற்கு எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள் என்று  சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. தொடர்ந்து,  நேற்று முன்தினம் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ்வழியில் பயின்ற  மாணவர்களுக்குப் பயனளிக்கும் இவ்வளவு மாதங்களாகத் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஏன்?


 தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலை  கிடைக்கும் இந்தச் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் பெறுவதையும் காலம் தாழ்த்தி-அதற்காகத் திமுக ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்திடும் சூழ்நிலையை உருவாக்கிட  வேண்டாம் என அதிமுக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் 20%  இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

15 comments:

  1. நான் முதல b.com english medium அடுத்து B.Lit tamil chellatha

    ReplyDelete
    Replies
    1. ST.XAVIER'S ACADEMY, NAGERCOIL, CELL:8012381919
      PGTRB2021 regular and online class starts on: 14-12-2020.
      நடைபெறும் பாடங்கள்..
      ENGLISH
      MATHEMATICS
      BOTANY
      COMMERCE And
      TNEB accountant.
      Study materials also available.!

      Delete
  2. 1முதல் 12 வரை தமிழ்

    ReplyDelete
  3. மிகச் சிறப்பு.....
    நீதிமன்றம் கையிலெடுத்த பிறகுதான்
    ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா?
    (8 மாதங்கள் ) இவ்வளவு தாமதமா?
    தடைகற்களா?
    நீதி ஓங்குக.
    வாய்மையே வெல்லும்.
    நல்லதே நடக்கும்.

    ReplyDelete
  4. This go-10th,12th,dip,B.Sc,M.Sc,only and (1-9)th ,B.Ed,M.Ed,BE,ME, Phd,M.phil,MBBS,BDS,SET,NET,11th enna midiyum

    ReplyDelete
  5. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றால் 40 முதல் 45 வயது வரை உள்ள அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் பணி வாய்ப்பு நிச்சயம்.இந்த நடைமுறையைத் தேர்தல் அறிக்கையில் கூறும் அரசே தேர்தலில் வெற்றி பெறும்.

    ReplyDelete
  6. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் மொழியில் பயின்று இளநிலை பட்டம் (தமிழ் லிட்) மூன்று வருடங்கள் படித்தவர்களுக்கு மட்டுமே இவ் ஒதுக்கீடு செல்லும்....

    ReplyDelete
  7. First B.Com Enlish Medium appuram Tamil...kandippaga sellum..

    ReplyDelete
  8. Raja kandippa sellum...degree first enlish medium appuram ennoru degree tamil medium kandippa sellum...but 10th ,12th Tamil medium erukku la appdina okk

    ReplyDelete
  9. Part time teachers ku help panuga pls 🥺

    ReplyDelete
    Replies
    1. உங்க போன் நம்பர் தாங்க உங்களிடம் பேசணும் நண்பரே

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி