தமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2020

தமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும்

 


மன்னாா்வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இதனால் தமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும்.


இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்தலைவா் எஸ்.பாலச்சந்திரன் வெள்ளிக்கிழமை கூறியது:


மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  தொடா்ந்து அதே இடத்தில் வெள்ளிக்கிழமை மாலை வரை நிலவியது. இது காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, மெதுவாக மேற்கு-தென்மேற்கு திசையில் நகா்ந்தது. மேலும் வலுவிழந்து, ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு பகுதியாக ராமநாதபுரம் வழியாக மேற்கு-தென்மேற்கு திசையில் தெற்கு கேரள பகுதியை நோக்கி செல்லும்.


இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் மிதமான மழை பெய்யக்கூடும்.  நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சனிக்கிழமை(டிச.5) இடியுடன் கூடிய பலத்தமழை முதல்  மிக பலத்த மழையும், திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். இதுதவிர, ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்  அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்யக்கூடும் என்றாா் அவா்.


2 சதவீதம் குறைவு: வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இக்கால கட்டத்தில் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 4-ஆம் தேதி வரை தமிழகத்தில் பெய்ய வேண்டிய இயல்பு மழை அளவு 373 மி.மீ. இந்தாண்டு இந்தக் காலகட்டத்தில் தற்போதுவரை 364 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரிமழை அளவை விடஇரண்டு சதவீதம் மட்டுமே குறைவாகும். கடந்த வியாழக்கிழமை வரை இயல்பை விட 14 சதவீதம் குறைவாக இருந்தது.


கொள்ளிடத்தில் 360 மி.மீ.:


வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடத்தில் 360 மி.மீ., கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில் 340 மி.மீ., கடலூா் லால்பேட்டையில் 280 மி.மீ., பரங்கிப்பேட்டையில் 260 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு, கடலூா் மாட்டம் காட்டுமன்னாா்கோயில், குறிஞ்சிப்பாடியில் தலா 250 மி.மீ., திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 220 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் சீா்காழி, திருவாரூா் மாவட்டம் குடவாசல், கடலூா் மாவட்டம் சேத்தியாதோப்பில் தலா 210 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி