பள்ளிக் கல்வித்துறை - அலுவலங்கள் / பள்ளிகளில் உள்ள பணியாளர்களுக்கான பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு. - kalviseithi

Dec 24, 2020

பள்ளிக் கல்வித்துறை - அலுவலங்கள் / பள்ளிகளில் உள்ள பணியாளர்களுக்கான பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.


கல்வித் துறையின் கீழ் உள்ள அலுவலகங்கள் பள்ளிகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு 2000-21 - ம் ஆண்டிற்கான உத்தேசக் காலிப் பணியிட மதிப்பீட்டின்படி 15.03.2020 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வு - பணிமாறுதல் பெறுவதற்கான தகுதிவாயந்த இளநிலை உதவியாளர் , தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- II தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் இடம் பெற்று dhaar 130 பணியாளர்களுக்குப் பதவி உயர்வு பணிமாறுதலுக்கான கலந்தாய்வு 26.12.2020 ( சனிக்கிழமை அன்று நடத்தப்பட உள்ளது . தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் வரிசை எண் . 1 முதல் 130 வரை இடம் பெற்றுள்ளவர்களைப் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொள்ள அறிவுறுத்திட வேண்டும் . பதவி உயர்வு பெறுபவர்கள் பதவி உயர்வைத் தற்காலிக உரிமைவிடல் செய்யும் பட்சத்தில் , அடுத்து உள்ளவர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கிய எதுவாக 131 முதல் 150 வரை இடம் பெற்றுள்ளவர்கள் அழைக்கப்பட வேண்டும். ஆனால் , இவர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்படுவது மூத்தவர்கள் பதவி உயர்வினை உரிமைவிடல் செய்வதைப் பொறுத்து அமையும் . இக்கலந்தாய்வு நடைபெற உரிய வாதிகள் எற்பாடு செய்யப்பட வேண்டும் . காலதாமதம் ஏற்படாத வகையில் கலந்தாய்வினை நடத்திட எதுவாக ஏற்கனவே கலந்தாய்வுப்பணி மேற்கொண்ட கணினி இயக்குபவர்களை இக்கலந்தாய்வுப் பணிக்கு நியமிக்கலாம். 
6 comments:

 1. இதைப்போலவே ஆசிரியர் மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு,
  அதை தொடர்ந்து புதிய
  ஆசிரியர்
  பணி இடங்களை நிரப்ப வேண்டும்.

  ReplyDelete
 2. ஒ௫ கு௫ப் trtவ௫ம்னுநம்பிட்டு இ௫க்குது 100℅டீஆர்டீவராது 90மேல் ௭டுத்தவர்களுக்கு ஜனவரியில் பணி வாய்ப்பு ௭ன தகவல்

  ReplyDelete
  Replies
  1. பொய்யான தகவல்களை பதிவிடாதீர்கள் நண்பர்களே... ஏற்கனவே மனதளவில் ரொம்ப வேதனையில் உள்ளோம். ஜனவரியில் நியமனம் என்பது உண்மையா....

   Delete
  2. Loosu payalea unkitta minister sonnana
   Avarea innaiku solratha nalaiku maranthararu

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி