மாணவர்களே இல்லாத பள்ளிகளில் பயிற்சிக்கு வந்த பி.எட் மாணவர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2020

மாணவர்களே இல்லாத பள்ளிகளில் பயிற்சிக்கு வந்த பி.எட் மாணவர்கள்.

 


கடந்த சில நாட்களாக, ஆசிரியர் பயிற்சி மேற்கொள்வதாக கூறி, பிஎட் மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். பள்ளிகளை திறக்காமல், மாணவர்களே வராத நிலையில், ஆசிரியர்களை எவ்வாறு பயிற்சிக்கு அனுமதிப்பது என தெரியாமல் தலைமை ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். அதேசமயம், அவர்கள் பயிற்சி மேற்கொண்டதாக கையெழுத்திட அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்த இரு நாட்களாக பிஎட் மாணவர்கள், ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 4 முதல் 10 பேர் வரை வந்து சேருகின்றனர்.


தாங்கள், அரசுப்பள்ளியில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கான அனுமதி கடிதத்தையும் அளிக்கின்றனர். பள்ளிகள் திறக்காமல், மாணவர்களே இல்லாத நிலையில் யாரை வைத்து அவர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியும். அவர்களுக்கு தெரிந்த ஆசிரியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மூலமாக தொடர்பு கொண்டு, அழுத்தம் கொடுக்கின்றனர். இதுபோன்ற அழுத்தம் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்து வருகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. இவ்வாறு தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

14 comments:

  1. பயிற்சிக்கு வந்தவர்களை முப்பது நாளைக்கு ஸ்கூல பெருக்கி கூட்டி குப்பையை அள்ளிப் போட சொல்லுங்க. B.Ed படிச்சவங்க எல்லாம் நாளைக்கு இந்த வேலைக்கு தான போக போறாங்க. நாளைக்கு ஒரு எக்ஸ்பீரியன்சுக்கு இது உதவும்ல...

    ReplyDelete
    Replies
    1. நீங்க எல்லாம் பள்ளிக்கூட பக்கமே மழைக்கு கூட ஒதுங்கியது இல்லையோ.இப்படி சொல்றீங்க

      Delete
  2. posting illai piraku eppadi b.ed patithu enna seiya porenka

    ReplyDelete
    Replies
    1. b.ed is not only for posting. thousands of private schools are there in tamilnadu.

      apo ethuku college porom, nera tnpsc elutha 10th pothume..

      Delete
  3. பயிற்சிக்கு வந்தவர்களை முப்பது நாளைக்கு ஸ்கூல பெருக்கி கூட்டி குப்பையை அள்ளிப் போட சொல்லுங்க. B.Ed படிச்சவங்க எல்லாம் நாளைக்கு இந்த வேலைக்கு தான போக போறாங்க. நாளைக்கு ஒரு எக்ஸ்பீரியன்சுக்கு இது உதவும்ல...

    ReplyDelete
    Replies
    1. தற்போது 80 நாட்கள் பயிற்சி

      Delete
  4. posting illai piraku eppadi b.ed patithu enna seiya porenka

    ReplyDelete
  5. School la natakkura online class la participate pannuvanga .Thakaval theriyama message potathinga. Pasanga illatha payirsi illa. Antha HM order ra sariyaa patikkalanu artham.

    ReplyDelete
  6. 😀😀Primary class lessons available in this link.https://www.youtube.com/c/itamilcorner

    ReplyDelete
  7. Ramki சொல்வது சரிதான். பயிற்சிக்கு அனுப்பினவனையும் செருப்பால் அடிக்கனும் பள்ளிகள் விடுமுறைன்னு அவனுங்களுக்கு தெரியாதா?

    ReplyDelete
  8. Ramki சொல்வது சரிதான். பயிற்சிக்கு அனுப்பினவனையும் செருப்பால் அடிக்கனும் பள்ளிகள் விடுமுறைன்னு அவனுங்களுக்கு தெரியாதா?

    ReplyDelete
  9. அரசுப் பள்ளிகளில் Online வகுப்புகள் Whatsapp குழுக்கள் மூலம் நடைபெறுகிறது. அந்த குழுவில் இவர்களை இணைத்து வழிகாட்டி ஆசிரியரின் பாடங்களை கவனிக்க சொல்லலாம். மாணவர்களின் வெளிப்பாடுகளை கண்காணிக்கலாம். தன்னுடைய உத்திகளையும் பயன்படுத்தி மாணவர்களையும் தன்னையும் முன்னேற்றிக் கொள்ளலாம்.
    பேரிடர் காலத்தில் இத்தகைய மாற்றங்களை நாம் ஏற்றுக் கொண்டுதான் தீர வேண்டும்.

    வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் நாம் அப்படி பேசுவது முறையல்ல.

    நாளையே இந்நிலை மாறலாம். நிறைய ஆசிரியர்கள் பணியமர்த்தப் படலாம்.

    நல்லதே நடக்கும். நம்புங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி