பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு பதிவுமூப்பு ஆசிரியர்கள் வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2020

பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு பதிவுமூப்பு ஆசிரியர்கள் வேண்டுகோள்

 


பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு பதிவுமூப்பு ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வேலைவாய்ப்பு அலுவலக மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என சங்கம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், பலகட்ட போராட்டங்களை நடத்தியது. தமிழகத்தில் மாறி மாறி வரும் அரசுகள், ஆசிரியர் நியமனத்தில் கொள்கை விளக்கம் என்று கூறி அதிமுக அரசு பதவி ஏற்கும் போதெல்லாம் தகுதித்தேர்வு என்றும், திமுக அரசு பதவி ஏற்கும் போதெல்லாம் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். இந்நிலையில் அதிமுக அரசு கடந்த 9 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி தேர்வு நடத்தி, தேர்வு செய்து வருகிறது. அதிலும் குழப்பம் ஏற்பட்டு தற்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மறுபடியும் போட்டித் தேர்வு எழுதி அதில் அதிக மதிப்பெண்கள் பெறுவோருக்கு பணி என்று அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தது தேவையானதா அல்லது வேலைவாய்ப்பு அலுவலகமே தேவைதானா என்ற கேள்வி எழுகிறது.


பட்டப்படிப்பு முடித்து பிறகு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அனைத்து பயிற்சிகளையும் பெற்று பிஎட் பட்டம் பெற்றவர்களை, மேலும் தகுதித் தேர்வு போட்டித் தேர்வு என எழுத வைத்து வேலை வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது. இந்தநிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் மோசடிகள் அரங்கேறி உள்ள நிலையில் தேர்வு எழுதியவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் டிஎன்பிஎஸ்சி மேல் நம்பகத்தன்மை சீர்குலைந்துள்ளது. ஆசிரியர் தேர்வு முறையில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் என்ற முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும்.

கடந்த கால 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் பதிவு மூப்பு அடிப்படையில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணி நியமனத்திற்காக காத்திருக்கும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் மாநில செயற்குழு கூட்டி, அதில் முடிவெடுக்கப்படும். அதன்பிறகும் தமிழக அரசு செவிசாய்க்காவிட்டால், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணி நியமனத்திற்காக காத்திருக்கும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்துடன் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

30 comments:

  1. மீண்டும் குழப்பத்திற்கு வழிவகுக்கும் ...சீனியாரிட்டி எனில் திமுக சந்தேகமே

    ReplyDelete
    Replies
    1. Neenga enna solreenga puriyala dhinagaran. Seniority la indha aadichila pota next DMK varadhunu solreengala? Enakku 38 age. Seniority um irukku. 2017,2019 rendu tetla tum pass. Idhukku mela innoru competitive exam mum ezhudhanumam. Pasangala pakkama nan sagara varaikkum paducha kooda velai kidaikkadhu.

      Delete
    2. உங்கள் நிலைமை புரிகிறது.ஆட்சி மாறும்போது அரசு கொள்கை முடிவு என சீனியாரிட்டி அல்லது தேர்வு என வைத்துவிட்டு இப்போது பத்து ஆண்டுகள் தேர்வு நடைமுறை உள்ளபோது மீண்டும் சீனியாரிட்டி ஏற்புடையது அல்ல...எனது தனிப்பட்ட கருத்து யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்

      Delete
  2. தேர்வு வைத்து பணிநியமனம் செய்வதையும் ஆசிரியர் தேர்வு வாரியம் செய்யாமல் இப்படியே தள்ளிப்போட்டால் தேர்ச்சி பெற்றவர்களின் குடும்பச் சூழ்நிலையை இவ்வரசுக்கு விளையாட்டாக போய்விட்டது.கடந்த ஏழு ஆண்டுகளாக இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனம் நடைபெறாமல் இருப்பதற்கு முதலில் இச்செயல்படா வாரியத்தை இழுத்து மூடுங்கள்.அனைத்து அரசாங்க வேலைகளையும் ஏலம் விட்டு பணத்திற்கு விற்றுவிடுங்கள். அரசுக்கு செலவு மீதியாகும்.

    ReplyDelete
  3. ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பதிவு மூப்பு + ஆசிரியர் பயிற்சி பதிவு மூப்பு அல்லது வேலை வாய்ப்பு அலுவலகத்திலன் பதிவு மூப்பு இவற்றை கொண்டு பணி நியமனம் செய்யவேண்டும்.இதுவே சரியான முறை.எத்தனை தேர்வு எழுதுவது குடும்பத்தை குழந்தைகளை நடுரோட்டுல விட்டுட்டு சாப்பாட்டுக்கு பிச்சை எடுக்கனும். MLA அமைச்சர்கள் ஆக்குவதற்கு எத்தனை தகுதி தேர்தலை சந்திக்கின்றனர்?????

    ReplyDelete
  4. ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பதிவு மூப்பு + ஆசிரியர் பயிற்சி பதிவு மூப்பு அல்லது வேலை வாய்ப்பு அலுவலகத்திலன் பதிவு மூப்பு இவற்றை கொண்டு பணி நியமனம் செய்யவேண்டும்.இதுவே சரியான முறை.எத்தனை தேர்வு எழுதுவது குடும்பத்தை குழந்தைகளை நடுரோட்டுல விட்டுட்டு சாப்பாட்டுக்கு பிச்சை எடுக்கனும். MLA அமைச்சர்கள் ஆக்குவதற்கு எத்தனை தகுதி தேர்தலை சந்திக்கின்றனர்?????

    ReplyDelete
  5. ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பதிவு மூப்பு + ஆசிரியர் பயிற்சி பதிவு மூப்பு அல்லது வேலை வாய்ப்பு அலுவலகத்திலன் பதிவு மூப்பு இவற்றை கொண்டு பணி நியமனம் செய்யவேண்டும்.இதுவே சரியான முறை.எத்தனை தேர்வு எழுதுவது குடும்பத்தை குழந்தைகளை நடுரோட்டுல விட்டுட்டு சாப்பாட்டுக்கு பிச்சை எடுக்கனும். MLA அமைச்சர்கள் ஆக்குவதற்கு எத்தனை தகுதி தேர்தலை சந்திக்கின்றனர்?????

    ReplyDelete
  6. Employment seniority + tet pass

    ReplyDelete
    Replies
    1. இதுவும் சரியான முறை.

      Delete
    2. இதுவும் சரியான முறை.

      Delete
    3. இதுவும் சரியான முறை.

      Delete
  7. Good method. Don't need one more exam.

    ReplyDelete
  8. கரெக்ட் மெத்தேடு

    ReplyDelete
  9. தகுதித் தேர்வு + சீனியாரிட்டி

    ReplyDelete
  10. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றால் 40 முதல் 45 வயது வரை உள்ள அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் பணி வாய்ப்பு நிச்சயம்.இந்த நடைமுறையைத் தேர்தல் அறிக்கையில் கூறும் அரசே தேர்தலில் வெற்றி பெறும்.

    ReplyDelete
  11. AT PRESENT GOVT FORMING DMK. DMK KOLGAI MUDIVU 100% EMPLOYMENT SENIORITY. AIADMK KOLGAI MUDIVU 100% EXAM. SO RIGHT KNOW DMK GOVT. POSSIBLE ONLY FOR EMPLOYMENT SENIORITY ONLY.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி