பொதுத்தேர்வு அட்டவணையை முதல்வர் விரைவில் வெளியிடுவார் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Dec 29, 2020

பொதுத்தேர்வு அட்டவணையை முதல்வர் விரைவில் வெளியிடுவார் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகத்தில் 10ம் வகுப்பு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும். அதற்கான தேர்வு அட்டவணையை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில் மினி கிளினிக்கை திறந்து வைத்த அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் மினி கிளினிக் தொடங்க உத்தரவிட்டு, அதன்படி கிளினிக்குகள் திறக்கப்பட்டு வருகிறது.
 

இதன் மூலம் மருத்துவ வசதி இல்லாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறுவார்கள். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழகத்தின் பணியை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். தமிழகத்தில்தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகம் தான் கொராேனா வைரசை தடுக்கும் பணியில் முன்னோடியாக திகழ்கிறது. இதுதவிர எல்லா துறையிலும் தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நலத்திட்ட உதவிகள் பள்ளி திறந்தவுடன் வழங்கப்படும். பள்ளிக்கு மாணவர்கள் வராவிட்டாலும் அவர்களுக்கான சைக்கிள், சீருடைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
 

கொரோனா காலத்தில் அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டு அதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவுகளை அறிவிப்பார். நடப்பு கல்வி ஆண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிப்பதற்கான வாய்ப்பே இல்லை. மேலும், 10ம் வகுப்பு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடப் பகுதிகள் குறித்து மாணவர்களுக்கு தெரிவித்து, அதற்கு பிறகு தான் முதல்வரின் ஒப்புதல் பெற்று விரைவில் அதற்கான அட்டவணை அறிவிக்கப்படும். பகுதி நேர  ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதை பொறுத்தவரையில் நிதி பற்றாக்குறை இருப்பதால் அதுகுறித்து முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும்.
 

* வேலூரில் திருவள்ளுவர் படம் வெளியானது

‘கல்வித் தொலைக்காட்சியில் திருவள்ளுவர்  படம் காவி நிறத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த படம் வேலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. பொருளாதார பாடப்  பகுதியில் திருவள்ளுவரின் படத்தை போட்டு அவரின் குறளையும் போட்டுள்ளனர். கடந்த 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் எந்த பாடப்பகுதியையும் ஆன்லைனில் வெளியிடக்கூடாது என்று கூறியும், தனியார் தொலைக்காட்சியில் வெளியிட்டுவிட்டனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விளக்கம்  கேட்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

8 comments:

 1. மாண்புமிகு செங்கோட்டையன் கல்வித்துறை ஐயா அவர்களே முதலில் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை வெளியிடுங்கள்

  அடுத்து பள்ளி திறப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடுங்கள்

  அடுத்து மிக விரைவில் பொதுத்தேர்வு அட்டவணை வெளிவிடலாம் ஐயா.

  ReplyDelete
 2. தளபதியாரிடம் கைகூப்பி வேண்டுகோள்.

  கடந்த2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் இருபதாயிரம் ஆசிரியர்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றோம். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணி வரும் வேளையில் 2014 நாடாளுமன்ற தேர்தல் வந்தது.. தேர்தலில் வெற்றி பெற அதிமுக அரசு 5% மதிப்பெண் தளர்வு வழங்கியது. அதனால் 80ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
  அனைவருக்கும் பணி வழங்க முடியாது என்பதால் வெயிட்டேஜ் முறை கொண்டு வந்தது தமிழக அரசு. அதனால் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. தன் தவறை உணர்வது போல நடித்து அதிமுக அரசு வெயிட்டேஜ் முறையை ரத்து செய்து மீண்டும் ஒரு தேர்வு எழுத வேண்டும் என குழிக்குள் தள்ளியது.
  கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் கூட நிரப்படவில்லை. வெயிட்டேஜ் முறையினால் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றும் கடந்த 7ஆண்டுகளாக வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறோம். சான்றிதழ் காலாவதி ஆகும் நிலையும் வந்து விட்டது.

  ஆட்டம் முடிகிறது. ஆறு மாதத்தில் விடிகிறது
  என தளபதியார் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தார்.

  ஆகவே யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் 2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் கால நீட்டிப்பு செய்து தகுதி மதிப்பெண் +பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்கபடும் என அறிவிக்க வேண்டும். அதனால் எதிர்காலத்தில் வரும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் பணி வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் காத்திருக்கும் தேர்வர்களுக்கும் வரும்.

  இவ்வாறு தேர்தல் அறிக்கை கொடுத்து ஒட்டுமொத்த ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப ஓட்டுக்களையும் பெற்று மிக அதிகமான இடங்களை பிடித்து
  ஆசிரியர்களின் காவலர் "கலைஞரின்" வழியில் அமைய இருக்கும் தமிழினத்தின் தளபதியார் ஆட்சியில் எங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டுகிறேன்..

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் தேர்தல் முடிந்து வெற்றி பெற்று ஆட்சியில் அமரும் வரை தான். ஆட்சியில் அமர்ந்ததும் அவரவருக்கு கொம்பு முளைத்து விடும். அப்புறம் பழைய குருடி கதவை திறடி கதிதான்.

   Delete
 3. தேர்தல் கூட்டம் நடத்தினா தொற்று பரவாது.ஸ்கூல் திறந்தா மட்டும் தொற்று பரவும். நல்ல லாஜிக் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. இது தான் இந்த அரசின் நிலை,அமைச்சர் முதல் அனைவரும் புத்திசாலிகள்.

   Delete
 4. நாடு நாசமா போகட்டும் அதைப்பற்றி இவர்களுக்கு கவலையில்லை துக்ளக் தர்பாரில் எதையும் எதிர்பார்க்க முடியாது நமது கேள்விக்கு ஒரே பதில் மே மாதம் நடைபெறும் தேர்தல் தான் நாம் அதில் மாற்றத்தை ஏற்படுத்தினால் தான் இதற்கு ஒரே தீர்வு

  ReplyDelete
 5. முதலில் பாட குறைப்பு என்ன என்று சொல்லுங்ககள். அடுத்து தேர்வு அட்டவணை பற்றி பார்ப்போம். எதை படிப்பது என்று தெரியாமலே மாணவர்கள் எப்படி தேர்வுக்கு தயாராவது

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி