எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு ? - அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2020

எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு ? - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

 


எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு; சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு: அமைச்சர் செங்கோட்டையன்

 சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் எந்தெந்த


வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தலாம் எனக் கல்வியாளர்களுடன் கலந்து பேசி தமிழக முதல்வர் முடிவெடுப்பார் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை பொறுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

 

கோவில்பட்டியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆன்மிகவாதிகளும், திராவிடவாதிகளும் ஏற்றுக்கொள்ளும் அரசாக அதிமுக அரசு உள்ளது. மதநல்லினம் என்ற வகையில் அனைவரையும் அரவணைத்து செல்லும் முதல்வராக எடப்பாடி கே.பழனிச்சாமி உள்ளார்.

 

சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தலாம் என கல்வியாளர்களுடன் கலந்து பேசி தமிழக முதல்வர் முடிவெடுப்பார்.

 

நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12-ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு குறித்து இன்னும் 10 நாட்களுக்குள் முதல்வரின் அனுமதி பெற்று அட்டவணை வெளியிடப்படும். கரோனா ஊரடங்கு காரணமாக 10, 12-ம் வகுப்புகளுக்கு 100 சதவீத பாடங்களை எடுத்துச் செல்ல முடியவில்லை.


குறிப்பிட்ட காலத்தில் பள்ளிகளை திறக்க முடியவில்லை. பள்ளிகள் திறக்கின்ற நாட்கள் குறைந்து வருவதால், அதற்கேற்ப பாடத்திட்டங்களை மாற்றியமைத்து அதிலுள்ள சாரம்சங்களை கொண்டு கேள்விகள் கேட்க வேண்டிய நிலையில் முதல்வர் உத்தரவு வழங்கி உள்ளார்.

 

அதனடிப்படையில், கல்வியாளர்களின் கருத்துகளை அறிந்து பணிகள் நிறைவடைந்துள்ளது. முதல்வரின் ஒப்புதல் பெற்றவுடன் செய்முறை தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும்.

 

வரும் சட்டப்பேரவை தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அதனை பொறுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் தேதிகள் குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.

 

நீட் தேர்வு பயிற்சியை பொறுத்தவரை இன்றுவரை 28,150 பேர் பதிவு செய்துள்ளனர். இதில், தற்போது 5,020 பேருக்கு ஆன் லைன் வழியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 11-ம் வகுப்பில் இருந்தே அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மூலமாக நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்.

 

ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்டது. பென் டிரைவ் மூலமாக ஸ்மார்ட் போர்டு வழியாக பயிற்சி வழங்கும் திட்டம். மேலும், ஐ.சி.டி. மூலம் மேல்நிலைப்பள்ளிக்கு 20 கணினிகளும், உயர்நிலைபள்ளிகளுக்கு 10 கணினிகளும் வழங்கப்பட்டு, அதில் அனைத்து பாடங்களையும் தரவிறக்கம் செய்து அதன் மூலம் பயிற்சி அளிக்க முடியுமா என அரசு பரிசீலித்து வருகிறது, என்றார் அவர்.

3 comments:

  1. Enda indha news ye marubadi podringa lossada neenga

    ReplyDelete
  2. சிறப்பு.வெகுசிறப்பு.

    ReplyDelete
  3. Sengottaya thanga mudiyala nee enga irukka

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி