முதுநிலை மாணவர்களுக்கு இன்று கல்லூரிகள் திறப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2020

முதுநிலை மாணவர்களுக்கு இன்று கல்லூரிகள் திறப்பு.

 


பொதுமுடக்கம் காரணமாக 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உயர் கல்வி நிறுவனங்கள் , முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான கல்லூரி வகுப்புகள் புதன்கி ழமை முதல் செயல்படும் . கரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 - ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள் ளது . இதன் காரணமாக பள்ளிகள் , கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில் , மாணவர் களின் கல்வித்தரம் பாதிக்கும் என வல்லுநர்களும் , பெற்றோர்களும் தெரிவித்தனர் . இதன் அடிப்ப டையில் , பள்ளிகள் ( 9 , 10 , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் மட்டும் ) , அனைத்துக் கல்லூரிகள் , ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங் கள் மற்றும் பள்ளி , கல்லூரி விடுதிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உள்பட அனைத்து விடு திகளும் , நவ .16 - ஆம் தேதி முதல் நிலையான வழி காட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டது . இது தொடர்பாக கருத்து கேட்கப்பட்ட நிலை யில் , பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது டன் , அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற் றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் கல் லூரி , பல்கலைக்கழகங்களை , டிச .2 - ஆம் தேதி முதல் திறக்கலாம் என முதல்வர் எடப்பாடி கேப ழனிசாமி உத்தரவிட்டார் . தொடர்ந்து , இணைய வழியில் தேர்வுகளும் , வகுப்புகளும் அனைத்து மாணவர்களுக்கும் நடத்தப்பட்டு வந்தது . முன் னதாக , நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக கல் லூரி திறப்பில் தாமதம் ஏற்படுமோ என்ற குழப் பம் எழுந்தபோது , திட்டமிட்டபடி டிச .2 - ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல் வித் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார் . இதன் தொடர்ச்சியாக , முதுநிலை 2 - ஆம் ஆண்டு அறி வியல் , பொறியியல் , தொழில்நுட்பப் பிரிவு , ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயி லும் மாணவர்களுக்கு , புதன்கிழமை கல்லூரிகள் திறக்கப்படுகின்றன . இது தொடர்பாக உயர்கல்வித் துறை அதி காரிகள் கூறும்போது , “ மாணவர்களின் எண் ணிக்கை குறைவு என்பதால் நோய்த்தொற்று அச்சுறுத்தல் அதிகம் இல்லை . திறக்கப்படும் கல்லூரிகளில் மட்டும் மாணவர்களுக்கான விடுதிகளும் திறக்கப்படும் . கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படும் " என்று தெரிவித்தனர் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி