மத்திய அரசு ஊழியர்கள் பணி விவரங்களை ஒரே தளத்தில் அறிந்து கொள்ள ஏற்பாடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2020

மத்திய அரசு ஊழியர்கள் பணி விவரங்களை ஒரே தளத்தில் அறிந்து கொள்ள ஏற்பாடு.



மின்னனு- மனிதவள மேலாண்மை அமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றிய அறிக்கையை, மத்திய உள்துறைச் செயலாளர் ஏ.கே.பல்லா வெளியிட்டார்.

மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சிதுறை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்த மின்னனு- மனிதவள மேலாண்மை அமைப்பில் (இ-எச்ஆர்எம்எஸ்) ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை மத்திய உள்துறை மற்றும் மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறைச் செயலாளர் ஏ.கே. பல்லா வெளியிட்டார். இந்த இ-எச்ஆர்எம்எஸ் அமைப்பில், 5 தொகுப்புகளின் 25 பயன்பாடுகள் இருந்தன.



இந்த நிகழ்ச்சியில் பேசிய பல்லா, ‘‘வரும் காலங்களில் அனைத்து அமைச்சகங்களுக்கும் இந்த இ-எச்ஆர்எம்எஸ் மிகச் சிறந்த உபகரணமாக இருக்கும். இதில் உள்ள செயற்கை நுண்ணறிவு உபகரணம், கொள்கைகளை உருவாக்கவும், பணியாளர் சார்ந்த விஷயங்களைக் கையாளவும் மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த இ-எச்ஆர்எம்எஸ் இதர அமைச்சகங்களிலும் விரிவாக பயன்படுத்துதைப் பிரபலப்படுத்த வேண்டும்’’ என்றார்.

மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கூடுதல் செயலாளர் ராஷ்மி சவுத்திரி கூறுகையில் ‘‘இ-எச்ஆர்எம்எஸ் மூலம் அரசு ஊழியர்கள், தங்கள் பணி தொடர்பான அனைத்து விஷயங்களையும் மின்னணு முறையில் பெறலாம் என்பதால், இது ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.

இந்த இ-எச்ஆர்எம்எஸ் மூலம் அரசு ஊழியர்கள் தங்கள் பணி விவரப் புத்தகம், விடுப்பு, வருங்கால வைப்பு நிதி, சம்பளம், கடன் , முன்பணம், சுற்றுலா உட்பட பல விவரங்களை ஒரே தளத்தில் பெறலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி