பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் குறைக்கப்பட்ட பாடங்கள் எவை? - kalviseithi

Dec 22, 2020

பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் குறைக்கப்பட்ட பாடங்கள் எவை?

 


தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் இளமாறன் விடுத்துள்ள அறிக்கை: கொரொனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. இதன்படி, 9ம் வகுப்பு வரை 50 சதவீத பாடங்களையும், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் பாடங்களையும் குறைக்கும் அறிவிப்பு வரவேற்புக்குரியது.  


தற்போது பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில்  எந்தெந்தப் பாடங்கள் குறைக்கப்படும் என்பதறியாது மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.  அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் குறைக்கப்பட்ட பாடப்பகுதி விவரங்களை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். குறைந்தபட்சம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காவது வெளியிட வேண்டும். பாடப்பகுதி இவைதான் எனச் சொல்லாததால் படிப்பில் ஆர்வம் குறையும். பொதுத் தேர்வுக்குரிய மாணவர்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் பாடப் பகுதி இவைதானென்று அறிவித்திடச் செய்யும்படி கல்வித்துறை அமைச்சரை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. நான் முதுகலை வணிகவியல் ஆசிரியர் 12 ஆம் வகுப்பு வணிகவியலில் 28 பாடங்களும், 11 ஆம் வகுப்பு வணிகவியலில் 33 பாடங்களும் இருக்கிறது.எனவே குறைக்கப்பட்ட பாடங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும். எனது ஆசிரியர் ஆகிய எனது கருத்து.. நன்றி 😍

    ReplyDelete
  2. இந்த ஆட்சியில் எல்லாமே குழப்பம்தான் ஆட்சியை விட்டு இறங்கு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி