பள்ளி மாணவ மாணவியரின் ரத்தப் பிரிவு விபரம் சேகரிப்பு-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - kalviseithi

Dec 10, 2020

பள்ளி மாணவ மாணவியரின் ரத்தப் பிரிவு விபரம் சேகரிப்பு-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 

தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவியரின் ரத்த பிரிவு விபரங்களை சேகரிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோயின் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து மாணவரின் கல்வி பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாகவும் ,கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றன.


தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் செயல்பட்டாவிட்டாலும் மாணவ மாணவியர் சார்ந்த நிர்வாகப் பணிகளை கல்வி துறை மேற்கொண்டுள்ளது.இதனை தொடர்ந்து மாணவ மாணவியரை பற்றிய முழு விபரங்கள் பிழைகள் நீக்கப்பட்டு, கல்வி மேலாண்மை மின்னணு தளத்தில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.எனவே அனைத்து மாணவ மாணவியரின் ரத்தப்பிரிவு விபரங்களை சேகரித்து மின்னணு தளத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


பள்ளிகளில் உள்ள மாணவ மாணவியரின் ரத்த பிரிவை பதிவு செய்யும்போது மாணவர்கள் வாய்மொழியாக கூறும் தகவல்கள் தவறாக இருக்கலாம் என்பதால் இரத்த பிரிவை கண்டறியும் சோதனை அறிக்கையை சேகரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி