ஆசிரியர்கள் அனைவருக்கும் இனி ஸ்மார்ட் கார்ட் கட்டாயம்! - kalviseithi

Dec 20, 2020

ஆசிரியர்கள் அனைவருக்கும் இனி ஸ்மார்ட் கார்ட் கட்டாயம்!தமிழகத்தில், அரசு, அதன் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு கியூ ஆர் கோடு வசதியுடன் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளருக்கு, 'ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழகஅரசு அறித்தது.


இதற்காக, எமிஸ் என்ற இணையதளம் மூலம், பெயர், முகவரி, ரத்த வகை, புகைப்படம் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன. முதல்கட்டமாக, ஸ்மார்ட் கார்டு தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் சேலம் மாவட்டத்தில், அரசு, அதன் உதவி பெறும் ஆசிரியர், ஆசிரியல்லா பணியாளர் என, 24 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் வழங்கப்பட உள்ளது. தற்போது முதல்கட்டமாக, 12 ஆயிரத்து , 901 கார்டுகள் தயார் நிலையில் உள்ளது. அதனை மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம், அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.


பள்ளி திறக்கும் போது, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் பணிக்கு வரும்போது, ஸ்மார்ட் கார்ட்டை கட்டாயம் அணிந்து வரவேண்டும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி