புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது: ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே கரையை கடக்கும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2020

புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது: ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே கரையை கடக்கும்.

 


வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புரெவி புயலாக உருவானது. வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடந்த நவம்பர் 30-ம் தேதி உருவானது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரெவி புயல் இன்று (3.12.2020) மன்னார் வளைகுடா பகுதியில்,  பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இப்புயல், (04-12-2020) நாளை அதிகாலையில் பாம்பன்- கன்னியாகுமரிக்கு இடையே, தென்தமிழக கடற்கரையை கடக்கக்கூடும் என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 


இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புரெவி புயல் ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக தெரிவித்தார். தற்போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பாம்பனுக்கு மேற்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில்  நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து, மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையேயான கடல்பகுதியில் கடந்து செல்லக்கூடும். தொடர்ந்து வருகிற 12  மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். புயல் வலுவிழந்ததால் காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தொடர்ந்து, காற்றின் வேகம் குறையும் என்றும் தெரிவித்தார். 


இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழைப்பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். பலத்த காற்றை பொருத்தவரை தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை காலை வரை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி