தேர்வர்களின் நலனுக்காகவும், எவ்விதத் தவறுகள் நேராமல் இருப்பதற்காகவும் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாகத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
* தேர்வர்கள் காலை 9.15 மணிக்குள் தேர்வுக் கூடத்துக்குச் செல்ல வேண்டும். இதற்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு, தேர்வு தொடங்கப்படும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது அந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது.
* விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கருப்பு நிற மை கொண்ட பந்து முனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* விடைத்தாளில் உரிய இரு இடங்களில் கையொப்பமிட்டு, இடது கை பெருவிரல் ரேகையைப் பதிக்க வேண்டும். அப்போது பிற இடங்களில் மை படாமலும், விடைத்தாள் சேதமடையாமல் இருப்பதையும் உறுதி செய்யவேண்டும்.
* வினாத்தாள் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்றால் (E) என்ற வட்டத்தைக் கருமையாக்க வேண்டும்.
* விடைத்தாளில் (A), (B), (C), (D) மற்றும் (E) என ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்பதை எண்ணி, மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பிக் கருமையாக்க வேண்டும். தவறினால் 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும். இந்தச் செயலை மேற்கொள்ளத் தேர்வு முடிந்த பிறகு கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.
* தேர்வர்களின் நலனுக்காகவும், எவ்விதத் தவறுகளும் நேராமல் இருப்பதற்காகவும் தேர்வாணையம் மேற்குறிப்பிட்ட அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது’’.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Yen trb pola carbon sheet thara mattangiringa. Neenga panra fraud veliyala theriyakudathunu thana.
ReplyDeletePart time teacher naga irukom
ReplyDeleteதவறு செய்வதற்கு பெரிதும் துணை நிற்பதே துறை சார்ந்த ஒருசில அதிகாரிகளும் அவர்கள்கீழ் பணியாற்றும் ஊழியர்களும்தான் என்பது நாடே அறியும்.
ReplyDeletePolice tnpsc board and thirudergalum tnpsc board ethuellum mulu pusanikayai sothula marasa makkaluku theriaths ethai pol trb board eppatithan arasial pathi arasu athikarikal pathi seitha ulalethu makaluku ellam therium saithan pongata
ReplyDeleteTRB computer instructors counselling date released 02/01/2021 and 03/01/2021
ReplyDeleteஅடேய்...வண்டியில போகும்போது OMR sheet மாத்தி வேலை வாங்குனவங்களை என்ன பண்ணீங்க...ஒன்னும் இல்ல...அதேதான் இப்பவும் நடக்கலாம்...அதுக்கு ஏன்டா இவ்ளோ பில்டப்
ReplyDeletephysics trb material available.
ReplyDeletelow cost. contact kumareist@gmail.com
Pg trb English irundha sollunga
Delete