இந்த ஆண்டு பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிக்க முதலமைச்சரிடம் ஆலோசனை : அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - kalviseithi

Dec 26, 2020

இந்த ஆண்டு பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிக்க முதலமைச்சரிடம் ஆலோசனை : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


 ‘‘இந்த ஆண்டு பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்,’’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சாவக்காட்டு பாளையத்தில் மினி கிளினிக்கை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.பின்னர் இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, கிராமங்களை நோக்கி மருத்துவர்கள், செவிலியர்களுடன் 2000 மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் 52.47 லட்சம் மடிக்கணிணி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதலமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும். இந்த ஆண்டு பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும். சூழ்நிலைக்கேற்ப முதலமைச்சர் என்ன முடிவெடுக்கிறாரோ அந்த முடிவுகளை தான் பள்ளி கல்வித்துறை செயல்படுத்தும்.

பொங்கல் பரிசு வழங்க உள்ள நிலையில் நியாய விலை கடைகளில் பயோமெட்ரிக் பழுது குறித்து பல இடங்களில் புகார் வந்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும, இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

29 comments:

 1. பூஜ்ய கல்வி ஆண்டு என்று தற்போதுஅறிவித்தால் என்ன பயன் அமைச்சர் அவர்களே.

  ReplyDelete
 2. அது நாம மட்டும் சொல்ல கூடாது.. உலகமே சொல்லணும், இல்லைனா நம்ம பசங்களுக்கு தான் பிரச்சனை..

  ReplyDelete
 3. வேண்டாம் அது இந்த கல்வி ஆண்டு மாணவர்களின் எதிர்காளம் பதிக்கும் எனவே எதாவது ஒரு வழியில் தேர்வு நடத்தி கல்வி ஆண்டிணை முடிக்குமாரு கல்வி அமைச்சரை கேட்டுக்கொள்கிரேன்

  ReplyDelete
 4. PG 3650
  TET 5761
  தற்போது நிலவரப்படி தமிழக பள்ளிகளில் உள்ள காலியிடங்கள் இ ப்பணியிடங்கள் தேர்வின் மூலமாக மட்டுமே நிரப்பப்படும் என்று தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. தேர்வா மறுபடியும் கொராண வரும் பூஜ்யம் தேர்வு என்பார். பிறகு கல்வி துறை கலைக்கப்பட்டது என சொல்வார் மணிதன் மங்குணி ஆகலாம் மாமங்குணி ஆணார
   Delete
  2. சார் இது உண்மையாலுமா...

   Delete
  3. இந்த காலியிடங்கள் ஒப்படைக்கப் பட்டுள்ளது. 2019 அரசு அறிவித்தது tet-571 Pg-1500 தற்போது மாணவர் சேர்க்கை அதிகரிப்பு காரணமாக கூடுதல் ஆசிரியர்கள் இடமாறுதல், உபரி பணிநிரவல் போக மீதம் இருக்கு அவை நியமன தேர்வு,pg தேர்வு மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக ஆசிரியர் சங்க நண்பர் தெரிவித்தார் இது மாறுபடலாம்.கிடைத்த தகவலை பகிர்ந்தேன்.எதுவாயினும் அனைவரும் படித்து கொண்டே இருப்பதற்க்காக தெரிவித்தேன்.

   Delete
  4. Pgtrb 2019 second list chance irka sir??cv poitu wait panrom sir

   Delete
  5. Pgtrb second list chance irka sir???

   Delete
  6. அது தெரியல சார்
   நம்பிக்கையோடு இருங்கள்
   படிக்கவும் செய்யுங்கள்

   Delete
  7. இந்த காலியிடங்கள் ஒப்படைக்கப் பட்டுள்ளது. 2019 அரசு அறிவித்தது tet-571 Pg-1500 தற்போது மாணவர் சேர்க்கை அதிகரிப்பு காரணமாக கூடுதல் ஆசிரியர்கள் இடமாறுதல், உபரி பணிநிரவல் போக மீதம் இருக்கு அவை நியமன தேர்வு,pg தேர்வு மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக ஆசிரியர் சங்க நண்பர் தெரிவித்தார் இது மாறுபடலாம்.கிடைத்த தகவலை பகிர்ந்தேன்.எதுவாயினும் அனைவரும் படித்து கொண்டே இருப்பதற்க்காக தெரிவித்தேன்.

   Delete
  8. பற்றாக்குறை ௨ள்ள பள்ளிகளில் விரைவில் ஆசிரியர் பணிநியமனம் செய்யப்படும் என பள்ளி கல்வித்துறை ௨யர்௮திகாாி தகவல்

   Delete
 5. நீர் வந்த. காலம் கல்வி துறை வேறு
  எப்படி ஆகும்? பூஜ்யம் தான் ஆகும்

  ReplyDelete
 6. சிறப்பாசிரியர் காலிப்பணியிட விபரம் எதற்கு புதிய தேர்விற்காகவா, 2017 ல் தேர்வு எழுதி சான்றிதழ் சரிபார்ப்பிற்கும் சென்றும் வேலை இல்லாமல் தவிப்போர் காகவா

  ReplyDelete
 7. இந்த ஆண்டு மட்டுமல்ல அமைச்சர் அவர்களே நீங்கள் ஆட்சி செய்த கடந்த நான்கு ஆண்டுகளுமே பூஜ்ஜியம் ஆண்டுகள்தான்

  ReplyDelete
 8. Manguni amaichar Enbathai manikku oru murai kaattikkolgireergal

  ReplyDelete
 9. 3வது fail ஆனவன கல்வி அமைச்சரா போட்ட கடைசில புஜ்ஜயம் தான் வரும்

  ReplyDelete
 10. கேவலமான கல்வி அமைச்சரை பார்த்த கடைசி தலைமுறை நம்ம தான்

  ReplyDelete
 11. Yes intha amaichair sariyana sompu nakki

  ReplyDelete
 12. எக்காரணம் கொண்டும் மாணவர்களின் கல்வி பூஜ்யம் ஆண்டாக அமையக்டாது. மாணவர்களின் கல்வி ஆண்டு பாதிக்காத வகையில் தமிழக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

  ReplyDelete
 13. 10,11மற்றும் 120ம் வகுப்புகளுக்கு பாடங்களைக் ‌குறைத்து தேர்வு நடத்துவது சிறப்பு. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று முடிவு எடுக்க வேண்டும்- விஷ்ராம் பிரபு

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி