பொதுத் தேர்வு தேதிகள் எப்போது அறிவிக்கப்படும் ? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2020

பொதுத் தேர்வு தேதிகள் எப்போது அறிவிக்கப்படும் ? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.

 


தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான வெளியான பின்பே 10,11,12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள அரசூரில் மினி கிளினிக் திறப்பு விழா கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. இதை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  இன்று திறந்து வைத்தார். பின்னர் சத்தியமங்கலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து நிரூபர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். 


அப்போது பேசிய அவர், மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக அரசு பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். முதல்கட்டமாக 7.5 சதவீதம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் பிறகு 10 சதவீதமாக உயர்த்துவது குறித்து முதலமைச்சர் தான் பரிசீலிக்க வேண்டும். தேசிய இளைஞர் தின திறனாய்வு போட்டியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை.


தமிழகத்தில் திறனாய்வு தேர்வு வினா தமிழ், ஆங்கிலத்தில் தான் கேட்கப்பட வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசிக்கப்படும். முதல்வருடன் கலந்து ஆலோசித்து பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது என அட்டவணை குறித்த முடிவு எடுக்கப்படும். தடை நீக்கப்பட்டு மலைப்பகுதியில் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,என்றார். இதனிடையே வரும் 6, 7ம் தேதி முதலமைச்சர் ஈரோடு மாவட்டம் வருகை தர உள்ளார். அப்போது பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.

8 comments:

  1. Replies
    1. Dai Ptt pavam pa veandam ippudiya soll solli avngala ean kasta paduthura...

      Delete
    2. செல்லம் யார்யா நீ சும்மா பிரிச்சு மேயுற . நீங்க இந்த சமுதாயத்துக்கு ஏதோ சொல்ல நினைக்கிறீங்க போல.

      Delete
  2. Dai panni Sengotaitan waste your government.

    ReplyDelete
  3. physics trb material available.
    low cost. contact kumareist@gmail.com

    ReplyDelete
  4. இனி TRB EXAM வராது அப்புறம் எதுக்கு சார் மெட்டிரியல் மீண்டும் செங்கோட்டையன் அவர்கள் கல்வித்துறை அமைச்சரானால் தமிழ்நாட்டின் கல்வி நிலை கேள்விக்குறி தான் இப்பொழுதே படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியது போல் மாற்றம் தேவை WE WANT CHANGE SO WE WILL WAIT FOR THAT எல்லாம் மாற்றத்திற்கு உரியது மாற்றம் ஒன்றே நிலையானது

    ReplyDelete
  5. Neeye oru 7.5 dhan 😂😂😂😂😂

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி