Breaking News : தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் ஜன.31 ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2020

Breaking News : தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் ஜன.31 ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு.

 கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக , மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி , தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு , இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி , முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும் , பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் , மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் , நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து , நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது . தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால் , நோய்த் தொற்று விகிதம் கடந்த ஒரு மாதமாக 1.7 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது . கடந்த 10 நாட்களாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1,100 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சுமார் 50,000 ல் இருந்து தற்போது 8,867 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்து உள்ளது.






7 comments:

  1. புதுச்சேரி பள்ளிகள் ஜனவரி 4 திறப்பு,தமிழ்நாடு பள்ளிகள் திறப்பு?தமிழ்நாடு லண்டன் பக்கத்துல இருக்கும்போல ,இந்த அரசுக்கு.கொரானா பரவிடுமாம்.புதுச்சேரியில் பரவாது.நல்ல அரசு

    ReplyDelete
  2. physics trb material available.
    low cost. contact kumareist@gmail.com

    ReplyDelete
  3. Part time teachers naga parthukarom pls reopen school.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி