CBSE பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை! - kalviseithi

Dec 5, 2020

CBSE பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!

 


தமிழகத்தில், ஐ.சி.எஸ்.இ., - சி.பி.எஸ்.இ., பள்ளிகளை மட்டும் திறக்க அனுமதிப்பது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.


கொரோனா பரவல் காரணமாக, மார்ச் முதல் பள்ளிகள், கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்க பட்டது. புதிய கல்வி ஆண்டு துவங்கியும் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. கல்லுாரிகளில், முதுநிலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி பிரிவினருக்கு மட்டும், நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன.


இந்நிலையில், பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதிலும், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்காவது நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் என, தனியார் பள்ளிகளின் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.இதன்படி, பொதுத்தேர்வு எழுத உள்ள, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடி வகுப்பு நடத்த அனுமதிக்குமாறு, ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் தரப்பில், அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர்.


அதேபோல, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தரப்பிலும், சில நிர்வாகிகள், பள்ளிகளை திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, தமிழக பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தரப்பில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை திறக்க உத்தரவிட்டால், அதை அமல்படுத்தலாம் என, இந்த ஆலோசனையில் பேசப்பட்டுள்ளது. 


பருவ மழை தீவிரமாக பெய்வதால், பள்ளிகளை திறந்தாலும், அடிக்கடி விடுமுறை விட வேண்டும்; எனவே, டிசம்பர் இறுதி வரை பொறுத்திருந்து, ஜனவரியில் திறக்கலாம் என, சில அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

14 comments:

 1. 10, 11, 12 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க வேண்டும் நடைமுறை படுத்துங்கள் கல்வித்துறை மாண்புமிகு செங்கோட்டையன் ஐயா

  ReplyDelete
  Replies
  1. Innada aagudu unakku aavuna 10 school reopen panna num sollitu irukka mairu

   Delete
  2. உங்களுக்கு மட்டும் ஆண்டவன் ஒரு அறிவு தான் வைத்திருப்பார் போல அதான் இப்படி தரங்கெட்டு பேசுற

   முதலில் உங்களுக்கு உங்க அம்மாகிட்ட ஒழுக்கம்னா என்ன என்று கற்றுகொண்டு அப்புறம் வந்து பேசுங்கள்

   யார் மனதையும் புண்படுத்தும் படி பேசுவதை தவிருங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் தோழரே

   Delete
 2. Cbse schools open pannuvagga.because mostly all vip child studing in cbse so conform open pannuvagga sikkaeam.but state borad school la open panna mattagga becaude poor people child in state borad.ethuthan nadakka pothu ethu conform.we are not a mutta.......

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு உனக்கு என்ன பிராப்ளம்.... உன்ன எவன் சேக்க வேண்டாணு சொன்னான்.

   Delete
  2. Kena ku athu enaku problem illai.ni eppai ur child da cbse la serka urimai eruko athe pol enakum comment poda urimai eruku.so mind ur words

   Delete
  3. Ur name verum kumar ra kena ku... Kumar ra

   Delete
  4. அட unknown ல வர அப்பன் பேரு இல்லாதவன்... தமிழ்நாட்டுல cbse ல படிக்கிறவன் எல்லாம் பணக்காரன் இல்ல. கடன் வாங்கி தான் படிக்க வைக்கிறான் புள்ளைய. பெரிய புழுதி மாதிரி பேசுற.

   i am not supporting cbse schools alone to be opened, and as per the rules it won't be possible. all board schools will be opened together in tn. i am just opposing cbse is only for elite. its not true. right from cookie to rich all studying in private schools, just mind ur fucking words a piece of shit...

   Delete
 3. Ada Kena kendri vidyalaya la serka government staffa erukanum r mp recoment vendum.illana eggaluku serka therium Ni onnum enaku solla vendam.en problem ma thirjja enni onnum god kidaiyathu.so vaiyaum and su... Mudinu summa eru

  ReplyDelete
 4. When there is a comment going on the future of children, pl discuss only about that. Children don't know who is rich or who is poor.Mr Madasamy had placed a simple request of the reopening of the school.But such dirty comments!!!

  ReplyDelete
 5. Here the topic is only about the reopening of the school.The children don't know the rich or the poor.If you really think of your future you will not be using such indecent words.There are many women and students also who read this news. Try to keep them in mind and send your comments.

  ReplyDelete
 6. 10, 11, 12 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க வேண்டும் நடைமுறை படுத்துங்கள் கல்வித்துறை மாண்புமிகு செங்கோட்டையன் ஐயா

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி