கேட் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியீடு; ஆட்சேபிக்க இன்று கடைசித் தேதி - kalviseithi

Dec 11, 2020

கேட் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியீடு; ஆட்சேபிக்க இன்று கடைசித் தேதி

 

முதுநிலை மேலாண்மைப் படிப்புக்கான கேட் தேர்வு விடைக் குறிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் பிழைகள் இருந்தால் ஆட்சேபனை தெரிவிக்க இன்று கடைசித் தேதி  ஆகும்.

தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்பிஏ உள்ளிட்ட முதுநிலை மேலாண்மை பயில கேட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஐஐஎம் இந்தூர், அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, ராய்ப்பூர், ரோஹ்ட்க், போத்காயா, ராஞ்சி, கொல்கத்தா, ஷில்லாங், சம்பல்பூர், கோழிக்கோடு, உதய்பூர், விசாகப்பட்டினம், காஷிப்பூர், ஜம்மு, லக்னோ, நாக்பூர், திருச்சி ஆகிய 20 ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் பயிலலாம்.

ஐஐஎம் அல்லாத சில நிறுவனங்களும் கேட் தேர்ச்சியைக் கணக்கில் கொண்டு சேர்க்கை வழங்குகின்றன.

அதன்படி நடப்பு ஆண்டுக்கான கேட் தேர்வு கடந்த நவம்பர் 29-ம் தேதி நாடு முழுவதும் 147 நகரங்களில் நடைபெற்றது. இந்த ஆண்டு கேட் தேர்வை ஐஐஎம் இந்தூர் நடத்தியது.

தேர்வுக்கான விடைக் குறிப்புகளை ஐஐஎம் இந்தூர் டிசம்பர் 8ஆம் தேதி வெளியிட்டது. அவற்றில் பிழைகள் இருந்தால் ஆட்சேபனை தெரிவிக்க இன்று (டிச.11) கடைசித் தேதி ஆகும். தேர்வர்கள் ரூ.1,200 செலுத்தி ஆட்சேபனையை iimcat.ac.in என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

5 comments:

 1. அது CAT exam என்று நினைக்கிறேன்..

  GATE பொதுவாக February மாதத்தில் தான் வரும்

  ReplyDelete
 2. அது CAT exam என்று நினைக்கிறேன்..

  GATE பொதுவாக February மாதத்தில் தான் வரும்

  ReplyDelete
 3. அனைவருக்கும் வணக்கம்!

  சிந்தனை எதுவோ,
  அதுவாகவே நீயாகிறாய் - புத்தா

  அரசு ஆசிரியராக சிந்திப்போம், அரசு ஆசிரியர் ஆவோம்..,

  முதுகலை வரலாறு ஆசிரியர் பாடத்திற்கு என்றே சிறப்பான ஒரு பயிற்சி மையம் நமது புத்தா அகாடமி,

  வருகிற 13.12.2020 முதல் முதுகலை ஆசிரியர் வரலாற்று பாடத்திற்கு என்றே சிறப்பான பயிற்சி வகுப்புகள் தொடங்க இருக்கிறது. (PG-TRB 2020-21) கலந்து கொள்ள விருப்பம் உள்ள வருங்கால வரலாற்று ஆசிரியர்கள் தங்களது பெயரினை +91 9962027639 / +91 8838072588 என்ற கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

  கீழே உள்ள YouTube link மூலம் எங்களது மையத்தின் சிறப்பை அனைவரும் தெரிந்து கொள்ளலாம் 🤝
  https://youtu.be/IbBSEHoOQcY

  வகுப்பு தொடங்கும் நாள்:13.12.2020
  புத்தா அகாடமி
  இடம்: பிஷப் ஹவுஸ்
  ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரில், தருமபுரி.
  +91 9962027639 / +91 8838072588

  விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி


  நன்றிகள்

  ReplyDelete
 4. Please publish correct title.
  Do not arrebary

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி