Minority Scholarship Date Extension upto 31.12.2020 - Instruction Published. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2020

Minority Scholarship Date Extension upto 31.12.2020 - Instruction Published.

கல்வி உதவித் தொகை 2020-2021 – புதுப்பித்தல் ( Renewal ) விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விரைந்து முடிப்பதற்கான அறிவுரைகளை கல்வி நிலையங்களுக்கு வழங்குவது தொடர்பாக . 

 



 கல்வி உதவித் தொகை திட்டம் 2020-2021 தொடர்பாக கல்வி நிலையங்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்துவது , பத்திரிக்கை செய்தி வெளியிடுவது போன்ற பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.


ஆன்லைன் மூலம் 2020-2021 - ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் கல்வி நிலையங்கள் பதிவேற்றம் செய்ய ஏதுவாக முதற்கட்டமாக புதுப்பித்தல் ( Renewal ) விண்ணப்பங்கள் மட்டும் 10.12.2020 அன்று தொடங்கப்பட உள்ளது.


மேலும் புதுப்பித்தலுக்கான ( Renewal ) விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க 31.12.2020 அன்று வரை கால வரையறை செய்யப்பட உள்ளது . எனவே 2020-21 ஆம் கல்வியாண்டில் தங்கள் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கல்லூரிகளை 31.12.2020 அன்றுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கீழ்காணும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து கல்வி நிலையங்களும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


புதுப்பித்தல் இனங்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாணவர்களிடமிருந்து பெறப்பட்டு கல்வி நிலையங்களில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும் . 


2020-21ம் ஆண்டு முதல் , கல்வி உதவித்தொகை இணையதளத்தில் கல்வி உதவித்தொகை பெறும் மாணவ | மாணவியர்களில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறித்த விவரம் இடம்பெறும் என்பதால் , அதுகுறித்த விவரங்களையும் மாணவர்களிடமிருந்து பெற்று தயார் நிலையில் வைக்குமாறு கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தப்படவேண்டும். 


புதுப்பித்தல் இனங்கள் பொறுத்தவரை மாணவர்களின் முகவரி , விடுதி தொடர்பான தகவல்கள் மட்டுமே கல்வி நிறுவனங்களால் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் திருத்தம் செய்ய இயலும் . கலை , அறிவியல் , தொழில்நுட்ப , பொறியியல் , வேளாண்மை , மீன்வளம் , கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைகழங்களின் இறுதி ஆண்டு வகுப்புகள் 07.12.2020 முதல் தொடங்கவும் , அம்மாணவர்களுக்கான விடுதிகள் செயல்படவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் , விடுதி தொடர்பான இனங்களில் , மாணவர்கள் விடுதிகளில் சேர்ந்து பயிலும் மாதத்தினை சரியாக கணக்கிட்டு , அதற்கேற்றவாறு விடுதி விவரங்களை உள்ளீடு செய்ய அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்படவேண்டும்.


மேலும் கல்லூரியில் இடைநிறுத்தம் ( Discontinued ) மற்றும் வேறு கல்லூரிக்கு மாறுதல் ( Transfer ) அடைந்த மாணவ / மாணவியர்கள் விவரங்களை சரிபார்த்து , உறுதி செய்த பின்பே Discontinued / Transfer என்பதை ஆன்லைனில் கல்வித்தொகை இணையதளத்தில் தேர்வு செய்ய வேண்டும் என அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்படவேண்டும் . இதில் ஏற்படும் தவறுகளை மாவட்டம் / மாநிலம் ஆகிய எந்த நிலைகளிலும் திருத்தம் செய்ய இயலாது என்பதால் , மிகுந்த கவனத்துடன் இப்பதிவுகளை மேற்கொள்ள அறிவுத்தப்பட வேண்டும். 


கால நிர்ணயிக்கப்பட்ட நிர்ணயத்துக்குள் அனைத்து புதுப்பித்தல் இனங்களையும் கல்விநிலையங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் . காலநிர்ணயத்தினை நீட்டிக்க கோருவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.


 கல்லூரிகளிலிருந்து கேட்புகள் சமர்ப்பிக்கும் அதே வேளையில் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள் கேட்புகளை சரிபார்த்து உடனடியாக கல்வி உதவித்தொகைக்கான ஒப்பளிப்பு / நிராகரிப்பு செய்து கேட்புகளை துறைதலைவர் அலுவலகத்திற்கு ஆன்லைனில் அனுப்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அனைத்து கல்வி நிலையங்களும் முழுமையான கேட்புகளை சமர்ப்பித்துள்ளனரா என்பதற்கான அறிக்கையினை பெற்றுக் கொள்ள , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , இப்பணிகள் தொடர்பாக கல்லூரிகளுக்கு ஏதேனும் இடர்பாடுகள் தெரிவிப்பின் உடனடியாக இவ்வலுவலகத்திற்கு தெரியபடுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி