NTSE - தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை 21.12.2020 முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2020

NTSE - தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை 21.12.2020 முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு.

 


27.12.2020 அன்று நடைபெறவிருக்கும் தேசிய திறனாய்வுத் தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர்பட்டியலினை தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 21.12.2020 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே , ஒவ்வொரு தேர்வு கண்காணிப்பாளர்களும் தவறாமல் பெயர் பட்டியலினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மைய பதிவிறக்கம் செய்தவுடன் தேர்வுமையக் கண்காணிப்பாளர்கள் தேர்வு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் மற்றும் தேர்வர்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதையும் அம்மையத்திற்குட்பட்ட அனைத்து தேர்வர்களுக்கும் பெயர்பட்டியல் பெறப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். 


தேர்வுகூடநுழைவுச்சீட்டு


மேற்படி தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை 21 .12.2020 முதல் பள்ளித் தலைமையாசிரியர்கள் | முதல்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஏற்கனவே இத்தேர்விற்கு வழங்கப்பட்ட User ID | Password -ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ள உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


தேர்வர்களின் தேர்வுகூட நுழைவுச் சீட்டுக்களில் பெயர் / புகைப்படம் | பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின் திருத்தத்தினை சிவப்பு நிற மையினால் சுழித்து சரியான பதிவினை குறிப்பிட்டு பள்ளி தலைமையாசிரியர்களிடம் சான்றொப்பம் பெற்று தேர்வெழுத அத்தேர்வர்களுக்கு அனுமதி வழங்க தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் அறிவுறுத்துமாறு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி