TET நிபந்தனை ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு அரசாணை விரைவில் வெளிவரலாம் - பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு நம்பிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2020

TET நிபந்தனை ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு அரசாணை விரைவில் வெளிவரலாம் - பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு நம்பிக்கை



TET நிபந்தனை ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு உறுதிசெய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, பொதுச் செயலாளர்
பி.பேட்ரிக் ரெய்மாண்ட்.

‘‘கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. 

கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து வகை குழந்தைகளுக்கும் கல்வி என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும், அனைத்து குழந்தைகளுக்கும் எட்டாம் வகுப்பு வரை கல்வி பெறும் உரிமை வழங்கப்படுவதாக சட்டம் தெரிவிக்கிறது. இச்சட்டம் கல்வி நிறுவனங்கள் கட்டமைப்பு, பாடத்திட்டங்கள் பாடம் நடத்தும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி, பயிற்றுவிக்கப்பட வேண்டிய பாடங்கள் குறித்து மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் பிரிவு 23 (1) ன் படி, எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படக் கூடிய ஆசிரியர்களின் கல்வித் தகுதி தேசிய கல்வியியல் குழுமம் NCTE ன் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாநில அரசுகள் வரையறுக்க வேண்டும் என்று கூறுகிறது. அதன் அடிப்படையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் 23.8.2010 அன்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் மத்திய அரசுப் பள்ளிகளில் 6.3.2012 க்கு பின்னர் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு மட்டுமே தகுதித் தேர்வு கட்டாயம் என கூறப்பட்டு அதற்கு முன்பாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

 கேரள அரசு 20.9.12 அன்று வெளியிட்டுள்ள அரசாணை எண் 294ன் படி 31.3.2012 க்கு முன்னர் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளது.

கர்நாடக அரசு கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட அறிக்கை தேதியான 28 .7.2012க்குப் பிறகே தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளது. 

நீதிமன்றத்தில் பல்வேறு நீதியரசர்கள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ள நிலையிலும், மெட்ரிக் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை நியமனம் செய்வதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்கிற நிலையிலும், மாநில அரசுகளை இதுகுறித்த சட்ட நடைமுறைகளில் உரிய முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்கிற நிலையிலும் தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு தெளிவான முடிவை எடுக்காததால் ஏற்பட்ட சிக்கலான சூழலை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தற்காலிக தீர்வாக இந்த வகை ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு தமிழக அரசு முடிவு எடுக்கும் என கடந்த வருடம் ஒருசில பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள பல்வேறு உட்பிரிவுகளை செயல்படுத்தாத  தமிழக அரசு, பாடத்திட்டங்கள் அதற்கான ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் நியமனம், வகுப்பறை கட்டமைப்பு போன்றவற்றை கண்டுகொள்ளாத அரசு ஆசிரியர் நியமனத்தில் மட்டும் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்வதும் தொடர்ந்து குழப்பமான பல்வேறு உத்தரவுகளை பிறப்பிப்பதும் அரசின் தெளிவற்ற மனநிலையை காண்பிக்கிறது.

மேலும் பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தமிழக அரசு ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டு பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு விலக்களித்து அல்லது ஒரு புத்தாக்கப் பயிற்சியை நடத்தி அவர்களை தகுதி பெற்றவர்களாக அறிவிப்பதுதான் தமிழக அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறப்பானதாக அமையும்’’ என்றார்.

2010 க்கும் 2014க்கும் இடையில் தெளிவான அரசாணைகள் இல்லாததால் ஆசிரியர் தகுதித் தேர்வு இல்லாமல் ஆனால் மாவட்ட கல்வி அலுவலர்களால் அங்கீகரிக்கப்பட்டு பணியில் உள்ள 1700 ஆசிரியர்கள் நிலை கவலைக்குரியது.
16/11/2012 ஆம் தேதியிட்ட பள்ளிக்கல்வி இயக்கக செயல்முறைகளை மையமாக கொண்டு, 16/11/2012 ஆம் தேதிக்கு முன்பு பணி நியமனம் பெற்ற அரசு உதவி பெறும் சிறுபான்மை அற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுமையாக விலக்கு என்ற நியாயமான கோரிக்கையை ஏற்று தமிழக அரசு விரைவில் அரசாணை வெளிவிடும் என்று நம்பலாம்.

26 comments:

  1. Please issue second list in Pg trb

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு இல்லை

      Delete
    2. டெட் பற்றிய பணியிட விவரம் அறிய புத்தகசாலை பார்க்கவும்

      Delete
  2. Yes avangaluku nallathu nadakanum pls seekiram pannunga.nanga than tet la pass pannitu kastapadurom avangalavathu nimmathiya irukattum

    ReplyDelete
  3. Sir CV candidate also wait please fill in second list soon. Only for two weeks only r there.

    ReplyDelete
  4. Part time teachers naga irukom pls help panuga pls 🥺🥺🥺🥺🥺

    ReplyDelete
  5. 8 ஆண்டுகள் ஆகியும் உங்களால் tet pass பண்ண முடில, எதுக்கு... இருக்கீங்க, எட்டு லட்சம் முதல் 10 லட்சம் வரை லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்கள் நீங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Sir tet bsc cs ku yega vachaga udaney ye pg panalanu kekadhaiga life la kastatha matum Partha family naga 5 paisa kasu tharala ipa dha pg kastapatu kadan vangi correspondence la join paniruka

      Delete
  6. ஒருத்தருக்கும் வேலை கிடையாது பணம் இருக்கா

    ReplyDelete
  7. நம்புங்க நம்புங்க நாங்க ஏற்கனவே இங்கு வெம்பி கிட்டு இருக்கோம்...

    ReplyDelete
  8. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒரு
    தகுதி தேர்வு வைத்தால் நன்றாக இருக்கும்,அதிக மதிப்பெண் கூட எடுக்க
    தேவையில்லை 30% க்கு கீழ் எடுக்கும்
    ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யதேவையில்லை அதற்கு பதிலக
    வேற துறைகளில் பணி வழங்கினால்
    நன்றக இருக்கும்,அவர்களால் தரமான கல்வி மாணவர்களுக்கு வழங்க முடியவில்லை

    ReplyDelete
    Replies
    1. 30% என்பது மிக குறைவு.80% போதும்.

      Delete
    2. அப்படி என்றால் 50% ஆசிரியர்கள்
      பணியை இழக்க நேரிடும்.
      இது உண்மை.தேர்வு வைத்தால்
      50% ஆசிரியர்கள் போராட்டம் செய்வார்கள்.மீதி 50% ஆசிரியர்கள் தேர்வை வரவேற்று
      தேர்ச்சி பெறுவார்கள்.

      Delete
  9. 82 மதிப்பெண் பெற்று தங்களின் ஆசிரியர் பணியை தக்கவைத்துக்கொள்ள உங்களாலும் முடியவில்லை, 114 மதிப்பெண் பெற்றும் ஆசிரியர் பணியைபெற எங்களாலும் முடியவில்லை, எல்லாம் கலத்தின் கொடுமை.

    ReplyDelete
    Replies
    1. ரதி கரன் உலகத்திலேேயே தமிழ்நாட்ல தான் பெயிலான வங்களுக்கு அரசு வேலை அதுவும் ஆசிரியர் வேலை. இதற்கு நீதிமன்றமும் Support பேய்கள் அரசாளும் போது பிணத்தை தின்னும் சட்டங்கள்(சாத்திரங்கள்)

      Delete
    2. சாமி நாயே மூடிட்டு போ

      Delete
    3. அட பாவி உனக்கு ஏன் தூக்குது? தன்னில குசு விட்டா தெரியாம போயிடுமா? உண்மைய ஏற்க மனமில்லை உனக்கு

      Delete
    4. சாமி நீ என்ன பண்ணறனா உன்னோட சு.. ல இருந்து டிரெக்டா வாயில குசு வுட்ரு என்ஜாய்

      Delete
    5. உண்மைய சொல்ற மூஞ்ச பாரு நாய் நாய் 82 பெய்லுனு சொல்ல நீ யாரு நாயே. பெரிய இவரு து எச்சிக்கல எச்சிக்கல

      Delete
  10. எவ்வளவோ பொய் பேசிட்டோம் இது என்ன சூசுசூப்பீ...........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி